இளம்பிள்ளை பரபரப்பு: பழிவாங்க சென்ற கணவன், தவறான நபரை வெட்டி தாக்கு

சேலம் ,மே 13 : சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தனது மனைவியை திருமணம் செய்த நபரை பழிவாங்க சென்ற கணவன், காதலனுக்கு பதில், ஆள் மாறி தறித்தொழிலாளியை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவா(31). இவரது மனைவி பிருந்தா. இவரை இளம்பிள்ளை அருகே உள்ள மாட்டையாம்பட்டியை சேர்ந்த தறிபட்டறை உரிமையாளர் சுப்பிரமணி(32), கூட்டிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நேற்று சிவா, பிருந்தா ஆகிய இருவரையும் மேச்சேரி காவல் நிலையம் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பிருந்தா சுப்பிரமணியுடன் தான் வாழ்வேன் என கூறி சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிவா உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் மாட்டையாம்பட்டியில் உள்ள சுப்பிரமணியன் வீட்டிற்கு நேற்று அதிகாலை வந்துள்ளனர்.

அங்கு வீட்டு வாசலில் படுத்திருந்தவரை கத்தியால் வெட்டி உள்ளனர். கை கால்களில் வெட்டு விழுந்த நிலையில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அப்போது வெட்டப்பட்டவர் சுப்பிரமணி இல்லை என்பதும் பக்கத்து வீட்டில் வசிக்கும் தறித்தொழிலாளி இருசாக்கவுண்டர் (42) என்பதும் தெரியவந்தது.

உடனே 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தறி தொழிலாளியை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read : வன்னியரசின் சர்ச்சை பேச்சு.. கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிடர்கள் அதிரடி மனு!

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அடுத்தவரின் மனைவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சுப்பிரமணிக்கு பதில் ஆள் மாறி பக்கத்து வீட்டைச் சேர்ந்த தறித் தொழிலாளி இருசாக்கவுண்டரை முதல் கணவர் சிவா உள்ளிட்டோர் வெட்டியது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து முதல் கணவர் சிவா(31), அவரது தம்பி குமார்(28), நண்பர்கள் வசந்தகுமார்(28), சக்திவேல்(26) ஆகிய நான்கு பேரை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பிள்ளை அருகே மனைவியை திருமணம் செய்து கொண்ட காதலனுக்கு பதில், ஆள்மாறி தறித்தொழிலாளியை வெட்டிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *