கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!

IMG 20260823 162012

ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி

கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..

தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நலச்சங்கத்தின் தலைவர் தோழர் ரேனியஸ் ராஜ், பொதுச்செயலாளர் திருமூர்த்தி, பொருளாளர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினர். இம்மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிராம வங்கியின் பொது மேலாளர் சங்கர் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கருணாநிதி, யூனியன் வங்கியின் அகில இந்திய நலச்சங்க பொருளாளர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் திரளான பெண்களும் ஊழியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

  • கிரீமிலேயர் நீக்கம்:
    வங்கியிலும் பிற பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் OBC பிரிவினருக்குப் பெரும் பாதகமாக உள்ள ‘கிரீமிலேயர்’ முறையை மத்திய அரசு முற்றிலும் நீக்க வேண்டும்.
    சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு சாதி மக்களையும் துல்லியமாகக் கணக்கிடும் வகையில் படிவத்தில் விவரங்கள் இடம்பெற வேண்டும். கணக்கெடுப்பு நடத்துபவர்களுக்கு மாநில சாதி விவரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுச் சரியான முறையில் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
    வங்கிப் பணிகளில் பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
news desk
news desk
Articles: 97

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *