வன்னியரசின் சர்ச்சை பேச்சு.. கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிடர்கள் அதிரடி மனு!

image 280

கோவை ,மே 13 : ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று பேசிய வன்னியரசை கண்டித்து – கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தினர் புகார் மனு

ஜோதிடத்தை மூடநம்பிக்கை என விமர்சித்ததாக கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரான வன்னியரசுக்கு எதிராக தென்னிந்திய ஜோதிடர்கள் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தென்னிந்திய ஜோதிடர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பிரசன்ன விதக்தன் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசியபோது:

Also Read : திருநெல்வேலி : ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்றவர் கைது

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு பணியாளர் அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதை விசிக கட்சியின் வன்னியரசு விமர்சிப்பதாக தெரிவித்தார். ஜோதிடர் என்பதையே காரணமாக கொண்டு அவரை விமர்சிப்பது, ஜோதிடத் தொழிலையும், ஜோதிட நம்பிக்கையையும் அவமதிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், வன்னியரசு ஜோதிடம் குறித்து பேசிய கருத்துகள், தமிழகம் முழுவதும் உள்ள ஜோதிட குடும்பங்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக கூறினார். ஜோதிடம் என்பது பல தலைமுறைகளாக தொடரும் பாரம்பரிய தொழில் என்றும், அதை மூடநம்பிக்கை என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.

வன்னியரசு தனது கருத்தை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் உள்ள ஜோதிடர்களின் 1½ லட்ச குடும்பங்களும் சேர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் தொடரும் எனவும் அவர் எச்சரித்தார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *