திருநெல்வேலி : ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்றவர் கைது

image 279

திருநெல்வேலி, மே 13: திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீஸôர் கைது செய்தனர். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31). கட்டடத் தொழிலாளியான இவர் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் காணாமல் போனதாம். அக்கம் பக்கம் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. வழக்கமாக செவ்வாய்க்கிழமை காலை மேலப்பாளையத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறும் என்பதால் மாரியப்பன் அங்கு சென்று பார்த்தபோது சந்தையில் அவரது ஆடுகளை சங்கர்நகர், கணபதி மில் தெருவைச் சேர்ந்த முருகன்(23) என்பவர் விற்பதற்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட முருகனை போலீஸôர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »