திருநெல்வேலி மே 13 : நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீர் இன்றி நோயாளிகள் தவிப்பு ! டயாலிசிஸ் சிகிச்சை பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலை..
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் உயிருக்கு போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனையின் 7 மாடி கட்டிடங்களிலும் இன்று காலை முதல் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்றுள்ளது. இதனால் வார்டுகளில் தங்கியுள்ள நோயாளிகள், அவர்களது உதவியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அன்றாடத் தேவைகளுக்குக் கூட தண்ணீர் இன்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த தண்ணீர் தட்டுப்பாட்டினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது டயாலிசிஸ் பிரிவு தான். டயாலிசிஸ் சிகிச்சைக்குத் தடையற்ற தண்ணீர் வசதி மிக அவசியம் என்ற நிலையில், தண்ணீர் இல்லாததால் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை.
சரியான நேரத்தில் டயாலிசிஸ் செய்யப்படாததால், பல நோயாளிகளுக்கு உடலில் நச்சுக்கள் மற்றும் நீர் தேங்கி, கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவி வருகிறது.
மாவட்டத்தின் மிக முக்கியமான மருத்துவமனையில் 7 மாடிகளிலும் தண்ணீர் விநியோகம் தடைபட்டு 6 மணி நேரமாகியும், அதனைச் சீர்செய்ய மாற்று ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படவில்லை என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது வரை தண்ணீர் பிரச்சனை முடிவுக்கு வராததால், மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் உடனடியாக தலையிட்டு நோயாளிகளின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
நெல்லை , ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராமத்தில் நிலவும் கடுமையான சட்டம் ஒழுங்கு பதற்றத்தைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட ஐந்து… Read more: நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3.7 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகைகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகில் தீவிர வாகன தணிக்கையில்… Read more: நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments