தமிழக DGP சந்தீப் ராய் ரத்தோர் திடீர் மாற்றம்..காவல்துறையில் அதிரடி உத்தரவு!

Chennai , June 3: தமிழகக் காவல் துறையின் உயர்மட்டத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு மாநில அரசு இன்று (ஜூன் 3) உத்தரவிட்டுள்ளது.இதன்படி, தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநராகப் (DGP) பணியாற்றி வந்த டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ள அரசாணையில் (காவல்துறை குறிப்பு எண்: SC/24/2026) இந்த அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.இந்த இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் மிக முக்கியப் பொறுப்பான சட்ட ஒழுங்கு மற்றும் தமிழகக் காவல் படைத் தலைவராக (Head of Police Force) இருந்த சந்தீப் ராய் ரத்தோர், தற்போது சென்னை சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதற்காக, தற்போது கூடுதல் தலைமை இயக்குநர் (ADGP) அந்தஸ்தில் உள்ள சிறைத்துறை இயக்குநர் பதவியானது, காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டு, அவருக்கு இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக, சென்னை மாநகரக் காவல் ஆணையராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALso read : திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர் மரணம்: அதிர்ச்சி அறிக்கை

அதேபோல், சென்னை சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநராக (ADGP) பணியாற்றி வந்த கே.சங்கர் ஐபிஎஸ் அங்கிருந்து மாற்றப்பட்டு, சென்னை அமலாக்கப் பிரிவு சிஐடி (Enforcement Bureau CID) கூடுதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.அமலாக்கப் பிரிவில் நிலவி வந்த காலிப் பணியிடத்திற்கு கே.சங்கர் தற்போது தகுந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்கவுள்ளார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »