“குடும்பத்தோடு சாவு” மிரட்டல்.. கோவை பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டு- அவதூறு பரப்பியதாக 3 பெண்கள் மீது புகார்!

கோவை , May 21 : கோவை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னை மிரட்டி அவதூறு பரப்பியதாக மூன்று பெண்கள் மற்றும் ஒருவருக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்திநகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கணவர் கருணாநிதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் தன்யா (48), அண்மையில் காவல் ஆணையரிடம் அளித்த மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குடும்ப சூழ்நிலையால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சமாளிக்கும் நோக்கில், தனது கணவர் கருணாநிதி மற்றும் பிரதீப் என்பவருடன் இணைந்து தொழில் தொடங்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்காக பலரிடமும் கடன் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

அதில் ஒரு பகுதியாக, முருகன் என்பவரிடமிருந்து ரூ.2.5 லட்சம் கடன் பெற்றதாகவும், பின்னர் அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, 2022 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் FIR எண் 15/2022 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also read : கோவில்பட்டி: முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ரூ.2.5 லட்சம் தொகையை நீதிமன்றத்தில் வைப்பு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது தோழிகளாக பழகிய மசக்காளிபாளையத்தை சேர்ந்த கலைச்செல்வி (35), வடவள்ளியை சேர்ந்த சங்கீதா (35), ஆனைமலையை சேர்ந்த சந்தியா (27) ஆகியோர் தனது கடன் பிரச்சினையை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தன்யா குற்றம்சாட்டியுள்ளார்.

அவர்கள் தனது வீட்டின் உரிமையாளர், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர், பள்ளியில் பணிபுரியும் சிலர் உள்ளிட்ட பலரிடமும் தன்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. “பலரிடம் பண மோசடி செய்துள்ளார்” என்று கூறி சமூகத்தில் அவதூறு ஏற்படுத்த முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 20 ஆம் தேதி வெளியான தினகரன் நாளிதழில் வெளியான செய்தி மற்றும் புகைப்படத்தை காட்டி தன்னை மிரட்டியதாகவும், குடும்பத்தினரை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் தன்யா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் சங்கீதா, கலைச்செல்வி, சந்தியா மற்றும் மணிகண்டன் ஆகியோர் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், செய்தித்தாளை முகத்தில் வீசி அவமதித்ததுடன், “குடும்பத்தோடு தூக்கிட்டு சாவு” என மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதன்பிறகு மாலை நேரத்தில் மணிகண்டன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவதூறாக பேசியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பணம் தர முடியாவிட்டால், உனக்கு பணம் தர வேண்டியவர்களிடம் படுத்து கடனை அடைத்துக்கொள்” என்று அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தன்யா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களால் கடும் மன அழுத்தத்திற்கும் உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளதாக கூறியுள்ள அவர், தன்னை மிரட்டிய மற்றும் அவதூறு பரப்பியவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »