கோவில்பட்டி,May 21: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவரது புகைப்படத்தை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. அந்த முயற்சியை போலீசார் தடுக்க சென்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசாருக்கும் செருப்படிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற ராஜீவ் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமையில் கட்சியினர் கலந்து கொண்டு ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அரசு பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், அண்மையில் அனிதா ராதாகிருஷ்ணன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தின் போது, அனிதா ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தை செருப்பால் அடிக்க சிலர் முயன்றனர். இதனை போலீசார் தடுக்க முனைந்தனர். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளிடமிருந்து புகைப்படத்தை போலீசார் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரை மீறி புகைப்படத்தை செருப்பால் அடிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சில போலீசாரின் மீதும் செருப்பு பட்டதாக தகவல் வெளியாகி, இதையடுத்து போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் சில நிமிடங்கள் பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, திமுக மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனை கடுமையாக விமர்சித்தார். “59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இந்த நேரத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இல்லாதது வேதனை அளிக்கிறது. தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பெற்று வருகிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்பார்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “காங்கிரஸ் தலைவர்களை பற்றி அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசி வருகிறார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல செயல்படுகிறார். சனாதனம் குறித்து பேசத் தொடங்கிய நாளிலிருந்து திமுகவின் தோல்வி ஆரம்பித்துவிட்டது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த எங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது,” என்று தெரிவித்தார்.
அதேபோல், “பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க திமுக அனுமதிக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைக்க திமுக மறைமுக ஆதரவு அளிக்க முயன்றது. எதிர்காலத்தில் திராவிட ஓநாய்களை விரட்டியடிக்க வேண்டும்,” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அனிதா ராதாகிருஷ்ணன் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்ட அவர், “அவர் விரைவில் சிறைக்கு செல்வார். அதனை திசைதிருப்பவே காங்கிரஸ் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்,” என்றும் கூறினார்.
இந்த சம்பவம் காரணமாக கோவில்பட்டியில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
நெல்லை , ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராமத்தில் நிலவும் கடுமையான சட்டம் ஒழுங்கு பதற்றத்தைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட ஐந்து… Read more: நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3.7 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகைகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகில் தீவிர வாகன தணிக்கையில்… Read more: நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!
நெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். கடந்த ஜூலை 2ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, தனது… Read more: வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments