கோவை. மே 14: தங்கைக்கு காதல் டார்ச்சர் ! ஆவேசத்தில் காதலனையும், தூதரையும் தாக்கிய அண்ணன் ; தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலன் மற்றும் தூதரின் பெற்றோர்கள் ஆவேசம்… கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த “பிரபஞ்சம் அமைதி ஆசிரமம்” எனும் தனியார் ஆசிரமத்தில் தங்கி படித்து வரும் இரண்டு பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருமத்தம்பட்டி அருகே நெல்லெகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் யஷ்வந்த் மற்றும் சொக்கம்பாளையம் காந்திஜி ஹையர் செகண்டரி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் ரித்திக்ராஜ் ஆகியோர், “பிரபஞ்சம் அமைதி ஆசிரமம்” என்ற தனியார் ஆசிரமத்தில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில், எட்டாம் வகுப்பு மாணவியிடம் ரித்திக்ராஜ் காதல் தொந்தரவு செய்ததாகவும், யஷ்வந்த் அதற்கு தூதுவராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் அண்ணன், மேற்கண்ட இரு மாணவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது சம்பந்தமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியினர் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல கருமத்தம்பட்டியில் உள்ள காவல் நிலையத்திலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அடி வாங்கிய மாணவர்களின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்திருந்தனர். அப்பொழுது அவர்கள் கூறுகையில் ..
ரித்திக்ராஜின் தாய் காவியா கூறியதாவது: “2023-ஆம் ஆண்டு அரசு மற்றும் குழந்தைகள் நலக்குழு (CWC) அனுமதியுடன் என் மகன், மகளை ஆசிரமத்தில் சேர்த்தேன். பின்னர் மகனை வீட்டுக்கு அழைத்து வந்தேன். பரீட்சை விடுமுறையின்போது இரண்டு மாணவர்கள் சேர்ந்து என் மகனை கடுமையாக தாக்கியுள்ளனர்.ஆனால் இந்த சம்பவத்தை ஆசிரம நிர்வாகம் என்னிடம் மறைத்து, ரகசியமாக மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது. நான் தொடர்ந்து விசாரித்தும் உண்மையை சொல்லாமல் ஏமாற்றினர். மேலும், என் மகனை ‘உங்கள் அம்மாவிடம் சொல்லாதே’ என்று மிரட்டியதும் பின்னர் தெரியவந்தது.
சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறது. புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என குற்றம் சாட்டினார். மேலும், “புகார் கொடுத்தால் உங்கள் மகன் மீது POCSO வழக்கு போடுவோம் என்று மிரட்டினர். என் மகன் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் அவனை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும். ஏழைகள், மாற்றுத் திறனாளிகள் என்பதால்தான் எங்களை அவமதிக்கிறார்கள். என் மகனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்,” என்று கண்ணீருடன் காவியா தெரிவித்தார்.
.யஸ்வந்தின் தாய் சங்கீதா கூறியதாவது: எனது மகன் பெயர் எஸ்வந்த் இந்த ஆசிரமத்தில் தான் படித்து வந்தான். இந்த நிலையில் அங்கு இரண்டு மாணவர்கள் எனது மகனை சைக்கிள் செயின் மற்றும் ஒயர்கம்பியால் தாக்கியுள்ளனர். எனது மகனின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த ஆசிரமத்தில் இருந்து கடந்த 17ம் தேதி அன்று எனது மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆசிரமத்தினர் அனுமதிக்கவில்லை, இதனையடுத்து எனது மகனை வீட்டில் அழைத்துச்சென்று விசாரித்த பொழுது தான், எனது மகனை கடந்த 17ம் தேதி வீட்டிற்கு அனுமதிக்காத காரணம் எனக்கு தெரிந்தது .எனது மகனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. எனது மகனை அடித்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார். மேலும் இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம். இந்த நிலையில் எங்களை விசாரித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சொல்லியுள்ளனர் எனது மகனை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சென்னை , ஜூன் 13 : தமிழகத்தில் சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 1,328 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பேணவும் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த மாநிலம் தழுவிய சிறப்பு வேட்டை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம்… Read more: ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு செக்: 1,328 பேரை தூக்கிய தமிழ்நாடு போலீஸ்
வேலூர் , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக போலியாக போலீஸ் வேடமிட்டு வந்தபோது அவர் காவல்துறையிடம் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read more: ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில்… Read more: பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
பாட்னா , June 13 : பீகார் மாநிலம் பாட்னாவில் வாடிக்கையாளர்களைப் போல நடித்து, நகைக்கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாட்னாவின் திகா பகுதியில் உள்ள குறிச்சி பாலம் அருகே இந்த நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று இந்த கடைக்கு இரண்டு இளம் பெண்கள் நகைகளை வாங்குவது போல வந்துள்ளனர். கடையில் இருந்த நகைகளை காண்பிக்குமாறு அங்கிருந்த உரிமையாளரிடம் அவர்கள்… Read more: பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். அங்கு அவருக்கும் நாகேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில்… Read more: குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments