கள்ளக்குறிச்சி , மே 14; கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டம்…10 லட்சம் செலவு பண்ணி என் பையன காப்பாத்த முடியல ,என் குடும்பம் அழிஞ்சு போன மாதிரி யார் குடும்பமும் அழிஞ்சு போக கூடாது பெண்மணி ஆவேசம்…
விஜய் அண்ணா இத மட்டும் செஞ்சிட்டீங்கன்னா திரும்பவும் நீங்க தான் cm…
போராட்டத்தின் போது கூடவே இருந்து போராட்டம் செய்த போதை ஆசாமி திடீரென கடையை மூடக்கூடாது என குவாட்டர் பாட்டிலை உடைத்து போராட வந்த பெண்களிடம் வாக்குவாதம்… கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.மேலும் இந்த டாஸ்மாக் கடை அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டுக்கும் நடுவே அமைந்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளை மூட உத்திரவிட்டத்தின் பேரில் பல்வேறு மாவட்டங்களில் பேருந்து நிலையம் மற்றும் பள்ளி வளாகம் வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள கடைகளை மூடி வருகின்றனர்.
இந்நிலையில் சின்ன சேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையின் முன்பு போராட்டம் செய்தனர்.போராட்டத்தின் போது கூடவே இருந்து போராடிய போதை ஆசாமி திடீரென குவாட்டர் பாட்டிலை கீழே போட்டு உடைத்து கடையை மூடக்கூடாது என போராட வந்த பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர்கள் பெரும் அவதிக்க ஆளாவதாகவும் மேலும் இந்த டாஸ்மாக் கடையால் தனது மகன் மற்றும் கணவரை இழுந்ததாகவும் அக்கிராமத்தைச் சேர்ந்த அசோதை என்ற பெண்மணி பேட்டி அளித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேட்டி அளித்த நபர் தான் வார்டு உறுப்பினர் எனவும் 5 வருடங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த டாஸ்மாக் கடை அகற்றக்கோரி மனு அளித்ததாகவும் மேலும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை இந்த கடையை மூட முடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த டாஸ்மாக் கடையை முழுவதும் மூடினால் நீங்கள் தான் அடுத்த முறையும் CM எனவும் கூறியுள்ளார்.
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
நெல்லை , ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராமத்தில் நிலவும் கடுமையான சட்டம் ஒழுங்கு பதற்றத்தைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட ஐந்து… Read more: நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3.7 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகைகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகில் தீவிர வாகன தணிக்கையில்… Read more: நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!
நெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். கடந்த ஜூலை 2ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, தனது… Read more: வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை
நெல்லை , ஜூலை 4 : நெல்லை சந்திப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (29). இவர் நெல்லை சந்திப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் (Food Delivery) வேலை பார்த்து வருகிறார். தனது பணி நிமித்தமாக நெல்லை சந்திப்பு பகுதியில்… Read more: நெல்லை சந்திப்பில் டெலிவரி ஊழியரின் பைக் திருட்டு: போலீசார் விசாரணை
தென்காசி , ஜூலை 4: தென்காசி அருகே வாலிபால் விளையாடிய வாலிபர்களுடன் ஏற்பட்ட தகராறில், கோஷ்டி மோதலாக மாறி படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர். தென்காசி மங்கம்மாள் சாலை மாரியம்மன் கோவில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர்கள் சிலர் வாலிபால் விளையாடி முடித்துவிட்டு, இரவில் தங்களது நண்பர்களுடன்… Read more: தென்காசி அருகே கோஷ்டி மோதலில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments