காங்கிரஸ், CPI, CPM, VCK கூட்டணியுடன் “முதல்வர் விஜய்” பரபரப்பு.. ராஜ்பவனில் ஆட்சி அமைக்க உரிமைக் கோரியதாக தகவல்!

Chennai , May 8 : தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றி கழக தலைவர் Vijay தலைமையில் புதிய ஆட்சி அமைவதாக தீவிர தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக “120 MLA ஆதரவு உறுதி”, “முதல்வராகிறார் விஜய்”, “ராஜ்பவனில் ஆட்சி அமைக்க உரிமைக் கோரல்” போன்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
அரசியல் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் வகையில், காங்கிரஸ், CPI, CPM மற்றும் VCK ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் TVK ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை TVK கூட்டணி எட்டியதாக தகவல்கள் பரவுகின்றன.
Also Read : முதலமைச்சரை தேர்வு செய்வதில் ஆளுநரின் அதிகாரம் என்ன? எஸ்.ஆர்.பொம்மை தீர்ப்பு என்ன சொல்கிறது?
வெளியான தகவல்களின் படி, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய பின்னர், TVK தலைவர் விஜய் இடதுசாரி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் விஜய் சந்திப்பு நடத்தியதாகவும், ஆதரவு வழங்கியதற்காக மலர்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக அமையக்கூடிய வகையில், TVK தரப்பில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரியதாக கூறப்படும் தகவல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், “ராஜ்பவன் சந்திப்பு”, “பெரும்பான்மை ஆதரவு”, “நாளை பதவியேற்பு” போன்ற வார்த்தைகள் வேகமாக பரவி வருகின்றன. அதே நேரத்தில், இந்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையம் அல்லது அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பனையூரில் உள்ள TVK அலுவலகத்தில் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





