நெல்லை / சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே, வீடொன்றில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர். கைதானவர்களில் மும்பை மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பது நெல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட எல்லைப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, முக்கூடல் காவல் சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையிலான போலீஸார் நேற்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, முக்கூடல் சடையப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து சில்லறை விற்பனைக்காகக் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. முக்கூடல் பகுதி இளைஞர்களையும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும் குறிவைத்து இந்த நெட்வொர்க் செயல்படுவதாகக் கிடைத்தத் தகவலையடுத்து, ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் உடனடியாக சடையப்பபுரம் பகுதிக்கு விரைந்தனர்.
தகவலில் குறிப்பிட்டிருந்தபடி, அப்பகுதியைச் சேர்ந்த பவர் சங்கீதா என்பவரது வீட்டை போலீஸார் திடீரெனச் சுற்றி வளைத்து அதிரடி சோதனையில் இறங்கினர். போலீஸாரின் இந்தத் திடீர் வருகையைச் சற்றும் எதிர்பாராத அங்கிருந்த கும்பல் தப்பியோட முயன்றது. எனினும், உஷாரான போலீஸார் வீட்டின் அனைத்துப் பாதைகளையும் மறித்து, உள்ளே இருந்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து வீட்டின் உள் அறைகளில் நடத்தப்பட்ட விரிவான சோதனையில், சாக்கு மூட்டைகளில் சிறுசிறு பொட்டலங்களாகப் பார்சல் செய்யப்பட்டு, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த மூட்டைகளை எடைபோட்டுப் பார்த்தபோது, மொத்தம் 12 கிலோ கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் போதைப்பொருள் மொத்தத்தையும் போலீஸார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, வீட்டில் பிடிபட்ட 7 பேரிடமும் போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், முக்கூடல் சடையப்பபுரத்தைச் சேர்ந்த பவர் சங்கீதா (48), அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி (22), நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த ரசூல் பாத்திமா (40), குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் (63), மும்பையைச் சேர்ந்த ஜெய் பூர்நிஷா (55), சடையப்பபுரத்தைச் சேர்ந்த விஜயா (19) மற்றும் வீரவநல்லூரைச் சேர்ந்த இசக்கிமுத்து (25) ஆகிய 7 பேரும் கூட்டுச் சேர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டது அம்பலமானது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மொத்தமாகக் கஞ்சாவை வாங்கி வந்து, முக்கூடலில் உள்ள பவர் சங்கீதாவின் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர், இதனைச் சிறுசிறு பொட்டலங்களாகப் பிரித்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்க்கத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 19 மற்றும் 22 வயதுடைய இளம் பெண்களும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த முதியவர்களும் இருப்பது போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெளிமாநிலக் கும்பலுக்கும் இவர்களுக்கும் உள்ள பின்னணி குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து முக்கூடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைதான 5 பெண்கள் உட்பட 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கூடல் பகுதியில் ஒரே நாளில் 12 கிலோ கஞ்சாவுடன் 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போதைப்பொருள் நடமாட்டத்திற்கு எதிரான போலீஸாரின் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments