அரக்கோணம் ரயில்வே – யார்டு பகுதியில் ரூ. 54 கோடியில் மறுகட்டமைப்பு பணிகள்; 13 மின்சார ரயில் சேவையில் மாற்றம் ! பயணிகள் ஒத்துழைப்பு வழங்க ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்..
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, சுமார் ரூ.54 கோடி மதிப்பீட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலைய யார்டு பகுதியில் மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் ரயில் நிலையத்திற்குள் புளியமங்கலத்தில் இருந்து நான்கு வழி பாதை ஏற்படுத்தப்படுகிறது. இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் காலதாமதம் இன்றி குறித்த நேரத்திற்கு நடைமேடைக்கு வந்து செல்லும். எனவே, பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய முடியும். அதேபோல் நடைமேடை 1ஏ, 6, 7 ஆகியவை வழியாக புறநகர் மின்சார ரயில்களும் மற்றும் 1, 2 ஆகிய நடைமேடைகள் வழியாக விரைவு, அதிவிரைவு ரயில்களும் மற்றும் 3,4,5 ஆகிய நடைமேடைகள் வழியாக திருத்தணி வழியாக வரும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களும் தடையின்றி இயக்கப்பட உள்ளது. இதற்காக, ரயில்வே யார்டு பகுதியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக,இரவு மற்றும் பகல் நேரங்களில், தேவையான நேரங்களில் புறநகர் மின்சார ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் அரக்கோணம் – திருத்தணி மற்றும் அரக்கோணம் – திருவாலாங்காடு இடையே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே 17ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை நாகர்கோயிலில் இருந்து அரக்கோணம் வழியாக மும்பை செல்லும் விரைவு ரயில், அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வராமல் மேல்பாக்கம் வழியாகவே செல்லும்.
அதேபோல்,13 புறநகர் மின்சார ரயில்கள் ஒரு குறிப்பிட்ட நேரங்களில் அரக்கோணம் – திருத்தணிக்கு வராமல் திருவாலாங்காடு ரயில் நிலையத்திலிருந்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் 5 புறநகர் மின்சார ரயில்கள் திருவலாங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு காலை நேரங்களில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, புறநகர் மின்சார ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமங்களை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments