Kovilpatti,May 13 : கோவில்பட்டியில் நடைபெற்று வந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டி : சென்னை அணி சாம்பியன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியர் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் 32 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை மற்றும் அரியலூர் அணிகள் மோதின. இதித் 5 க்கு 1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
முன்னதாக நடந்த மூன்றாவது மட்டும் நான்காவது இடத்திற்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 7க்கு 1 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை வீழ்த்தியது
இதன் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. போட்டியில் சாம்பியன் பட்டம் என்ற அணிக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. 2,3,4 வது இடங்களைப் பிடித்த அணிகளுக்கும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில்… Read more: பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
பாட்னா , June 13 : பீகார் மாநிலம் பாட்னாவில் வாடிக்கையாளர்களைப் போல நடித்து, நகைக்கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாட்னாவின் திகா பகுதியில் உள்ள குறிச்சி பாலம் அருகே இந்த நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று இந்த கடைக்கு இரண்டு இளம் பெண்கள் நகைகளை வாங்குவது போல வந்துள்ளனர். கடையில் இருந்த நகைகளை காண்பிக்குமாறு அங்கிருந்த உரிமையாளரிடம் அவர்கள்… Read more: பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். அங்கு அவருக்கும் நாகேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில்… Read more: குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!
சென்னை , ஜூன் 13 : சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் மின்தடை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடைகாலம் என்பதால் மின்தேவை வழக்கத்தை விட பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் தற்போதைய மின்தடைக்கான காரணங்கள் குறித்தும் அதனை சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதிகாரப்பூர்வ விளக்கங்களை… Read more: தமிழகத்தில் மின்தடைக்கு ஓவர்லோடு மற்றும் நிலத்தடி கேபிள்கள் சேதமே காரணம்: மின்வாரியம் விளக்கம்
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆன்மீக மணம் கமழும் இந்தத் திருவிழா இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்குப் பாரம்பரிய முறைப்படி விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழாவின் தொடக்க நாளான இன்று காலை செப்பறை அழகிய கூத்தர் மற்றும் சிவகாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும்… Read more: செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை , ஜூன் 13 : நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண் சசுமாலா என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் அவரது குடும்பத்தினரின் உன்னதமான முடிவால் ஐந்து நபர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ராமையன்பட்டி பகுதியில் உள்ள தேநீர்க்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சசுமாலாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக… Read more: நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments