மயிலாடுதுறை அருகே மாட்டாங்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வாயில் 16 அடி நீள அலகு குத்தி அலங்கார காவடி எடுத்து வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரிழந்தூர் மாட்டாங்கரை கிராம மக்களின் காவல் தெய்வமாக ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அளிப்பதாகவும் பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆலயத்தின் 3-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரிழந்தூர் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயில் குளக்கரையிலிருந்து வானவேடிக்கை, மேளதாள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் சக்தி கரகம் புறப்பாடாகி அலகு காவடி, அலங்கார காவடி, முளைப்பாரி, பால்குடங்களுடன் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பக்தர்கள் 12 அடி முதல்16 அடி நீள அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேரிழந்தூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவல் தெய்வமான ஸ்ரீ மகா மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.















