மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

image 266

சென்னை வானிலைமையம் : சென்னை, மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 11.05.2026 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி, தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திற்கு அதிகரிக்கும் சூறாவளி தன்மையுடைய காற்று வீசக்கூடும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலை உயர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

also Read : திருநெல்வேலியில் ரயில் படிக்கட்டில் பயணம்.. இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

மேலும், 13.05.2026 முதல் 15.05.2026 வரை 1.0 மீட்டர் முதல் 1.4 மீட்டர் உயரம் வரை கடல் பேரலைகள் உருவாகக்கூடும் என்ற முன் எச்சரிக்கை அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்ட மீன்பிடிப் படகுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்கவும், மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிப்பில் ஈடுபடவும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் 13.05.2026 முதல் 15.05.2026 வரை மீன்பிடிப்பதை தவிர்க்குமாறும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *