திருவையாறு அருகே நள்ளிரவு திருட்டு.. பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை மாயம்!

image 265

தஞ்சாவூர் , மே 13 : திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகை திருட்டு !
நடுக்கடை பகுதியில் வீட்டின் கொல்லைபுற கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்…

திருவையாறு அருகே நடுக்கடை வயல் தெரு பகுதியை சேர்ந்தவர் இதயத்துல்லா (57) இவரது மனைவி சகிலா (52) இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வெளியூரில் வசித்து வருகின்றனர். இதயதுல்லா கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் காலை இவரது வீட்டின் கொல்லைப்புற கதவு திறந்து இருப்பது கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவங்கள் வீட்டின் உரிமையாளர் இதயத்துல்லாவிற்கும், திருவையாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Also Read : மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

இதையடுத்து இதயத்துல்லாவின் உறவினர் தஞ்சையை சேர்ந்த ஜாகீருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் வந்து சேர்ந்தார். மேலும் திருவையாறு போலீஸ் டிஎஸ்பி அருள்மொழிஅரசு, இன்ஸ்பெக்டர் மீனா, சப் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவஇடததிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கொல்லைபுற கதவை உடைத்து உள்ளே நுழைந்து கீழ் பகுதியில் படுக்கையறையில் இருந்த பீரோ மற்றும் மாடியில் இருந்த பீரோவையும் உடைத்து பீரோவில் இருந்த ஆரம், கைச்செயின், நெக்லஸ், செயின், நெத்திச்சூடி, தோடு உள்ளிட்ட 20 பவுன் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர் கலை கண்ணகி, மோப்ப நாய் லீயோ வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூட்டி யிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பவுன் நகை திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பும் பொது மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
IMG 20260823 162012

ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..…

Continue Reading
நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு

நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்…

Continue Reading
நெல்லை இரட்டைக்கொலை: தந்தை, மகன் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லை ,  ஜூலை 4 : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் தந்தை மற்றும் சிறுவன் காரை மோதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராமத்தில்…

Continue Reading
நெல்லையில் தடை செய்யப்பட்ட 3.7 கிலோ குட்கா பறிமுதல்.. இருசக்கர வாகனத்தில் மறைத்து கடத்தியவர் சிக்கினார்!

நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3.7 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரம் காவல்…

Continue Reading
வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை

நெல்லை , ஜூலை 4: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் இரு மகன்களைக் காரால் மோதித் தள்ளி, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் சம்பவ…

Continue Reading
நெல்லை சந்திப்பில் டெலிவரி ஊழியரின் பைக் திருட்டு: போலீசார் விசாரணை

நெல்லை  , ஜூலை 4 : நெல்லை சந்திப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (29). இவர் நெல்லை சந்திப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

Continue Reading
தென்காசி அருகே கோஷ்டி மோதலில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

தென்காசி , ஜூலை 4: தென்காசி அருகே வாலிபால் விளையாடிய வாலிபர்களுடன் ஏற்பட்ட தகராறில், கோஷ்டி மோதலாக மாறி படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுநர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர். தென்காசி மங்கம்மாள் சாலை…

Continue Reading
நெல்லையில் 4.350 கிலோ கஞ்சா வழக்கு: பல மாதங்கள் தலைமறைவான பீர் முகமது அதிரடி கைது!

திருநெல்வேலி , ஜூலை 4: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையதும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் பல மாதங்களாக போலீசாருக்கு போக்கு காட்டி தலைமறைவாக இருந்த நபரை மேலப்பாளையம் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெல்லை மேலப்பாளையம் அமீன்புரம் 7-வது தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் பீர் முகமது (30).…

Continue Reading
தாக்குதல் வழக்கு: 16 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு அபராதம்; நீதிமன்றம் அதிரடி

நெல்லை , ஜூலை 2: நெல்லையில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பரபரப்பான தாக்குதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், 3 பேருக்கு மொத்தம் 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி…

Continue Reading
பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி தப்பி ஓட்டம்… 2 போலீசார் சஸ்பெண்டு, 4 தனிப்படை தீவிர வேட்டை!
Palayamkottai Prison Escape: Undertrial Prisoner Flees at Jail Entrance, Two Police Personnel Suspended as Four Special Teams Launch Manhunt

நெல்லை , ஜூலை 2: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைவாசல் அருகே போலீசாரை ஏமாற்றிவிட்டு, ரவுடி பட்டியலில் உள்ள கைதி தப்பியோடிய விவகாரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு தலைமை காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதியை பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, டிரோன் கேமராக்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.…

Continue Reading
Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *