ராமநாதபுரம் , May 13 : கமுதி அருகே பம்மனேந்தல் குருநாத சுவாமி கோவில்- பிரம்மாண்டமாய் நடைபெற்ற 50 ம் ஆண்டு குருபூஜை விழா ! பக்தர்கள் அழகுவேல் எடுத்தும், சிறுவர்கள் வேடம் அணிந்தும், பெண்கள் 1008 பால்குடம் ஊர்வலம் நடத்தி பெரிய நாச்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குருநாத சுவாமி கோவில் 50 ஆம் ஆண்டு குருபூஜை விழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் குருநாத சுவாமி பெரிய நாச்சியம்மன் சித்தி விநாயகர் படர்ந்த புலி கற்பக விநாயகர் கரிசில் குளம் செல்வ விநாயகர் சுவாமிகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதணை நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய நாச்சி அம்மன் சுவாமிக்கு குருநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து பக்தர்கள் அழுகுவேல் எடுத்தும், சிறுவர்கள் செத்தாண்டி வேடம் அணிந்தும், 1008 பெண்கள் பால்குடங்களை சுமந்து மேளதாளம் இசை வாத்தியங்கள், வாண வேடிக்கைகள் முழங்க பம்மனேந்தல் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக கிராம பரிவார தேவதைகள் சுவாமிகளை வலம் சுற்றி சென்று நிறைவாக பெரியநாச்சி அம்மன் ஆலயம் சென்று மூலவர் பெரியநாச்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இதில் பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன் ஆலயத்தின் 13 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவம் மற்றும் 34 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. இந்த இரு பெரும் விழாக்களையும் முன்னிட்டு, அப்பகுதியில் 9 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா மிகக் கோலாகலமாக… Read more: கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு
மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் கிராமத்தில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையின் போது, மின்னல் தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தனர். சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணபதியம்மாள், சூலப்புரத்தைச் சேர்ந்த ராமுத்தாய் மற்றும் தனிக்கொடி ஆகிய… Read more: கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்
நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, இந்த வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி சோரீஸ்புரம் மடத்தூர் சாலையில் வழக்கறிஞர்… Read more: தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்
சிவகங்கை, May 27 : சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களைக் குறிவைத்து, போலித் தங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஒன்று தீவிரமாகச் செயல்பட்டு வருவது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அசல் நகைகளைப் போன்றே துல்லியமாகத் தயாரிக்கப்படும் இந்த நகைகளால் வங்கிகளுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வரும் சூழலில், சட்டச் சிக்கல்களுக்கு அஞ்சும் வங்கி நிர்வாகங்கள் புகார் அளிக்கத் தயங்குவதே இந்த கும்பலின்… Read more: சிவகங்கையில் அதிர்ச்சி: போலி தங்க நகைகளை அடகு வைத்து கோடிகள் மோசடி?
நெல்லை , May 27: புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட நபர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாக மின்வாரிய ஊழியர் மீது தொடரப்பட்ட வழக்கை திருநெல்வேலி நீதிமன்றம் தீவிரமாக விசாரித்து வருகிறது. திருநெல்வேலி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரபாண்டியன். இவருடைய மனைவி மீனா. தங்களது புதிய வீட்டிற்கு மின் இணைப்புப் பெறுவதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டில் மின்வாரிய ஊழியரான அருணன் என்பவரை இவர்கள் அணுகியுள்ளனர்.… Read more: மின் இணைப்பு லஞ்ச வழக்கு: பணத்தைத் பைக் திருப்பி கேட்டவரை இடித்ததாக நெல்லையில் பரபரப்பு
திருநெல்வேலி, May 27: தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், வழக்கமான நடைமுறையின்படி 22 நிரந்தர உண்டியல்கள் இன்று (மே 27, 2026) திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.28 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தென்தமிழகத்தின் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகத் திகழும் நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு,… Read more: நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.28.64 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கை
நெல்லை . மே 27 : நெல்லை டவுன் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை டவுன் பாரதியார் தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கி சுப்பிரமணியன். இவரது மனைவி சாந்தி (39). காதலித்து திருமணம் செய்து… Read more: கணவருடன் தகராறு: நெல்லையில் 3 பிள்ளைகளுடன் தாய் மாயமானதால் பரபரப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments