TVK விஜய் பதவியேற்பு விழா நாளை.. Aசென்னை முழுக்க 20 இடங்களில் Giant LED Screens.. பொதுமக்களுக்கு செம ஜாக்பாட் அறிவிப்பு!

TVK Chief Joseph Vijay swearing-in ceremony tomorrow: Chennai gears up with 20 giant LED screens for the public as massive crowds expected across the city

Chennai , May 9: TVK விஜய் பதவியேற்பு விழா – தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் TVK விஜயின் விழாவை பொதுமக்கள் காண சென்னை முழுக்க 20 இடங்களில் LED Screens அமைக்கப்படுகின்றன

தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படும் TVK தலைவர் விஜயின் முதலமைச்சர் பதவியேற்பு விழா நாளை காலை நடைபெற உள்ள நிலையில், சென்னை மாநகர மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்க உள்ள நிலையில், பொதுமக்கள் இந்த வரலாற்று தருணத்தை நேரலையில் காணும் வகையில் சென்னை முழுவதும் 20 முக்கிய இடங்களில் Giant LED Screens அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Also Read : ஆனந்தத்தில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் – “முதல்வராகும் மகனை பார்க்கும் கனவு நனவானது” – உருக்கம்

சென்னையின் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவிற்காக இப்போதே மக்கள் கூட்டம் திரளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. TVK ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் இந்த நிகழ்வை நேரில் காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னை முழுவதும் 20 இடங்களில் LED திரைகள்

பொதுமக்கள் அதிகமாக கூடும் முக்கிய பகுதிகளை தேர்வு செய்து அங்கு LED மின்னணு திரைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி LED திரைகள் அமைக்கப்பட உள்ள முக்கிய இடங்கள்:

  • அண்ணாநகர் டவர் பார்க்
  • மெரினா கடற்கரை
  • கோயம்பேடு பேருந்து நிலையம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
  • டி நகர் பஸ் ஸ்டாண்ட்
  • பெசன்ட் நகர்
  • திருவான்மியூர் பேருந்து நிலையம்
  • கத்திப்பாரா சந்திப்பு
  • செம்மொழி பூங்கா
  • வடபழனி பேருந்து நிலையம்
  • சோழிங்கநல்லூர் ஜங்ஷன்
  • மாதவரம் பேருந்து நிலையம்
  • ராமாபுரம் பூங்கா
  • அம்பத்தூர் O.T.
  • தண்டையார்பேட்டை உள்ளிட்ட 20 முக்கிய பகுதிகள்

இந்த அனைத்து இடங்களிலும் மக்கள் பாதுகாப்பாக கூடி பதவியேற்பு நிகழ்ச்சியை காணும் வகையில் காவல் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் : விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கும் இந்த நிகழ்ச்சிக்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் TVK கட்சி தொண்டர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் சென்னை நோக்கி வரத் தொடங்கியிருப்பதால், மாநகரம் முழுவதும் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.

சென்னை மக்களுக்கு மட்டும் கிடைத்த Special வசதி? இந்த LED Screen ஏற்பாடுகள் தற்போது சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. நேரு உள்விளையாட்டு அரங்கிற்குள் செல்ல முடியாத பொதுமக்களும் விழாவை நேரலையில் காண முடிவதால், இது “சென்னை மக்களுக்கு கிடைத்த Special Jackpot” என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

பலரும் “தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய Public Viewing ஏற்பாடு இதுதான்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயின் பதவியேற்பு விழாவை பொதுமக்களிடம் கொண்டு செல்ல LED திரைகள் அமைப்பது வெறும் நிர்வாக ஏற்பாடாக மட்டும் பார்க்கப்படவில்லை. இது அரசியல் தகவல் பரிமாற்றத்தின் புதிய மாதிரியாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் தேர்தல் பிரசாரங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்பு நிகழ்ச்சியையே மக்கள் மையமாக மாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் First-Time Voters மத்தியில் இது பெரிய அரசியல் ஈர்ப்பை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *