
சென்னை , மே 9 : TVK தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்கும் தருணத்தில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்த உணர்ச்சி வசமான வார்த்தைகள் !!
தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படும் இந்த அரசியல் சூழலில், TVK தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்கும் தருணம் குறித்து அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான S. A. Chandrasekhar உருக்கமாக பேசிய கருத்துகள் தற்போது பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகின்றன.
விஜய் அரசியலுக்கு வந்த நாள்முதல், அவரை ஒரு தலைவராக பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் மட்டுமல்ல, குடும்பத்தின் நீண்டநாள் கனவாக இருந்ததாக பலரும் கூறி வந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் தருணத்தில் எஸ்.ஏ.சி பகிர்ந்த உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் TVK தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “There is C. Joseph Vijay. Happy happy. I’m so so happy” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, “இது நீண்ட நாள் ஆசைதானே?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் என்ன செய்தாலும் என் மகனுக்காகத்தான் செய்தேன்” என உணர்ச்சியுடன் பதிலளித்தார்.
மேலும், “விஜயை ஒரு தலைவராக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததா?” என கேட்கப்பட்டபோது, “என்னுடைய எண்ணங்கள் எல்லாமே மகனின் முன்னேற்றத்திற்காகத்தான்” என்று தெரிவித்தார்.
விஜயின் அரசியல் எழுச்சிக்கு மக்கள் ஆதரவே முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், அதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் SAC பதிலளித்தார். “Finally Tamil people has succeeded” என அவர் கூறியது கவனம் பெற்றுள்ளது.
செய்தியாளர்கள் விஜயிடம் “முதல்வராக உங்கள் ஆலோசனை என்ன?” என்று கேள்வி எழுப்பியபோது, “I will do everything for the Tamilians” என அவர் கூறினார்.. தமிழக அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த இரு கட்சி அரசியலுக்கு மாற்றாக TVK உருவெடுத்திருப்பதாக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களிடையே விஜய்க்கு அதிக வரவேற்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.





