சென்னை, May29: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 2026-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில விருதுகள் பற்றிய முக்கியத் தகவல்களின் விவரங்கள்.
முக்கியத் தேதிகள் :
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 25, 2026 (மாலை 5:00 மணிக்குள்)
விருது வழங்கப்படும் நாள்: ஆகஸ்ட் 15, 2026 (சுதந்திர தின விழா)
விருது வழங்குபவர்: மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
விருதுப் பிரிவுகள் மற்றும் பரிசுகள்
அனைத்துப் பிரிவுகளுக்கும் பொதுவான பரிசாக 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அதனுடன் வழங்கப்படும் கூடுதல் ரொக்கப் பரிசு விவரங்கள் பின்வருமாறு :
விருதுப் பிரிவு
தகுதி / பங்களிப்பு
கூடுதல் பரிசு (ரொக்கம்)
சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியவர் (மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும்)
ரூ. 25,000/-
சிறந்த தொண்டு நிறுவனம்
மிகச்சிறந்த முறையில் சேவை புரிந்த அமைப்பு
ரூ. 50,000/-
சிறந்த மருத்துவர்
அர்ப்பணிப்புடன் சேவை புரிந்த மருத்துவ நிபுணர்
சான்றிதழ் மட்டும்
சிறந்த தனியார் நிறுவனம்
அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்திய நிறுவனம்
சான்றிதழ் மட்டும்
சிறந்த சமூகப்பணியாளர்
மறுவாழ்விற்காகவும் நலனுக்காகவும் களத்தில் நின்று சேவை புரிந்தவர்
சான்றிதழ் மட்டும்
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
சுயதொழில் செய்ய அதிக அளவில் கடன் உதவிகளை வழங்கிய வங்கி
1.தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்கள்https://awards.tn.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் 2.ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அதன் இரண்டு நகல்களை பிரிண்ட் எடுத்து, 25.06.2026 மாலை 5 மணிக்குள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரில் சமர்பிக்க வேண்டும்.
முக்கியக் குறிப்பு: ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரும் விண்ணப்பங்கள் உயர்மட்டத் தேர்வுக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று குறிபிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments