விஜய் தலைமையில் ஆட்சி அமையுமா? இடதுசாரிகளுடன் ரகசிய பேச்சு தீவிரம்.. பனையூரில் TVK எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!

image 154

Panaiyur , Chennai – May 8: விஜய் தலைமையில் ஆட்சி அமையுமா? பனையூரில் TVK எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இடதுசாரி ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைப்பாரா என்ற கேள்வி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் Vijay அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, பனையூரில் உள்ள TVK கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவிருப்பது அரசியல் திருப்புமுனையாகும் .

Also Read : “முதல்வர் விஜய்யா? எடப்பாடியா?” பெரும்பான்மை வேட்டையில் TVK.. கம்யூனிஸ்டுகள் கையில் தமிழக அரசின் ‘துருப்புச் சீட்டு’

பனையூரில் அவசர ஆலோசனை : 108 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற்றிருந்தாலும், முழுமையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால் TVK தனியாக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த கூட்டணி நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தமிழக அரசியலில் தீவிரமாக உள்ளது . தற்போது பனையூர் அலுவலகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வர தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் அங்கு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில், விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகே பனையூரில் நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK தரப்பில் இருந்து இடதுசாரி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மதசார்பற்ற கூட்டணி அமைப்பதற்கே விஜய் முக்கியத்துவம் அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன .

இதன் காரணமாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் Bharatiya Janata Party மற்றும் All India Anna Dravida Munnetra Kazhagam உள்ளிட்ட கட்சிகளுடன் நேரடி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாமல், இடதுசாரி மற்றும் சமூகநீதி சார்ந்த கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் விஜய் இருக்கிறார் .

TVK இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் நேற்று இடதுசாரி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கியமாக, Thol. Thirumavalavan உடன் விஜய் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும் வெளியாகியுள்ளது . அப்போது, பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து விஜய் விரிவாக விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை கூட்டங்களில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்று இரவு TVK பொதுச்செயலாளர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசியபோது, “அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள். நிச்சயமாக கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம்” என்று தெரிவிதுள்ளார் .

இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகே இன்று மீண்டும் அவசர ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் TVK நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *