
Texas , May 12 : டெக்சாஸ் அரசு Netflix மீது குழந்தைகள் தரவு திருட்டு, autoplay மூலம் திரை அடிமை உருவாக்கம் என அதிரடி வழக்கு தொடர்ந்துள்ளது. விவரங்கள் இதோ.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், முன்னணி ஓடிடி (OTT) தளமான Netflix மீது மிகப்பெரிய சட்ட நடவடிக்கை ஒன்றைத் தொடர்ந்துள்ளது. குழந்தைகள் உட்பட பயனர்களின் தரவை அனுமதி இல்லாமல் சேகரித்து, அதை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகவும், அதே நேரத்தில் பார்வையாளர்களை “திரை அடிமை” ஆக மாற்றும் வகையில் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தற்போது உலக டிஜிட்டல் துறையில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் அரசு முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்
டெக்சாஸ் Attorney General கென் பாக்ஸன் (Ken Paxton) காலின் கவுண்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், Netflix தளம் பயனர்களின் பார்வை பழக்கங்கள், விருப்பங்கள், சாதன தகவல்கள் மற்றும் இணைய பயன்பாடு போன்ற பல தரவுகளை தொடர்ந்து கண்காணிப்பதாக கூறப்பட்டுள்ளது.
அரசின் குற்றச்சாட்டின் படி, இந்த தரவுகள் வெறும் சேமிப்புக்காக அல்லாமல், விளம்பர தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் data brokers க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் மூலம் Netflix ஆண்டுக்கு பில்லியன் டாலர் அளவில் வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Netflix தனது சேவை “data tracking இல்லாத பாதுகாப்பான platform” என முன்பு தெரிவித்திருந்தது, ஆனால் அது உண்மைக்கு மாறானது எனவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் “Addictive Design” குற்றச்சாட்டு
இந்த வழக்கில் மிக முக்கியமான பகுதி குழந்தைகள் தொடர்பானது. Netflix தளம் “dark patterns” எனப்படும் உளவியல் அடிப்படையிலான design முறைகளை பயன்படுத்தி பயனர்களை தொடர்ந்து பார்க்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக குறிப்பிடப்படுவது:
- Autoplay feature (ஒரு episode முடிந்ததும் அடுத்தது தானாக தொடங்குதல்)
- Kids profile-ல் கூட autoplay default ஆக இருப்பது
- நீண்ட நேர பார்வையை ஊக்குவிக்கும் interface design
இவை அனைத்தும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை திரையில் அதிக நேரம் கட்டிப்போடும் வகையில் செயல்படுவதாக அரசு தரப்பு குற்றம் சாட்டுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை Netflix நிறுவனம் முழுமையாக மறுத்துள்ளது. அவர்களின் அதிகாரப்பூர்வ விளக்கத்தில்: வழக்கு “ஆதாரமற்றது” தகவல்கள் தவறாக விளக்கப்பட்டவை அனைத்து நாடுகளின் data protection சட்டங்களுக்கு ஏற்ப செயல்படுகிறோம் பயனர்களின் privacy-க்கு மதிப்பு அளிக்கப்படுகிறது என Netflix செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் அரசு கோருவது:
- சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளையும் அழிக்க வேண்டும்
- ஒவ்வொரு விதிமீறலுக்கும் அபராதம் (per violation penalty) விதிக்க வேண்டும்
- குழந்தைகளுக்கான autoplay அமைப்புகளை மாற்ற வேண்டும்
- தரவு பகிர்வு நடைமுறையை நிறுத்த வேண்டும்
இந்த வழக்கு “Texas Deceptive Trade Practices Act” அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது.








