
டெக் செய்தி : கூகுள் அதிரடி: சீன AI மாடல்களுக்குப் போட்டியாக ‘ஜெம்மா 4′ அறிமுகம்!
உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில் ,கூகுள் டீப்மைண்ட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஓப்பன் சோர்ஸ் மாடலான “Gemma 4”-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.சீனாவின் DeepSeek ,Alibaba போன்ற நிறுவனங்களின் அசுர வளர்ச்சியை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த புதிய மாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் முதல் பெரிய டேட்டா சென்டர்கள் வரை அனைத்திலும் இயங்கும் இந்த ஜெம்மா 4 ,முற்றிலும் இலவசமாக வணிக ரீதியாகவும் பயன்படுத்தும் வகையில் (Apache 2.0 உரிமத்துடன்) கிடைக்கிறது.இதனால் இனி ‘கிளவுட்’ தேவையின்றி பயனர்கள் தங்களது சொந்த கம்ப்யூட்டரிலேயே (Local AI) பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும்.
மனிதர்களைப் போல் சிந்திக்கும் திறன் (Advanced Reasoning) ,சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் கோடிங் பணிகளை எளிதாக்குவது இதன் சிறப்பம்சங்களாகும்.இந்த வெளியீடு ,சென்னை ,கோயம்புத்தூர் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்ப நகரங்களில் உள்ள AI ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் ,உள்ளூர் டெவலப்பர்களுக்கும் குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்க ஒரு மிகப்பெரிய நல்வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





