Nellai,May 23:நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில், பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை துண்டால் இறுக்கி, 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த 14 வயது சிறுவனையும் பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை அடுத்த தச்சநல்லூர், கரையிருப்பு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (36). வணிகவியல் பட்டதாரியான இவர், நேற்று நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலில் புறப்பட்டுள்ளார். குரும்பூர் அருகே நாலுமாவடியில் உள்ள ஆன்மீக மையத்திற்குச் செல்வதற்காக, பெண்கள் பயணிக்கும் பொதுப் பெட்டியில் அவர் அமர்ந்திருந்தார்.
ரயில் புறப்பட்டபோது, அதே பெட்டியில் ஓர் இளம் பெண்ணும், 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் வந்து அமர்ந்துள்ளனர். ஆரம்பத்தில் இயல்பாகவே இருந்த அந்தப் பெண்ணின் நடவடிகைகளில், ரயில் கச்சனாவிளை ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும்போது திடீர் மாற்றம் தெரிந்தது. பெட்டியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், திடீரென தமிழ்ச்செல்வியின் கழுத்தில் துண்டைப் போட்டுப் பின்புறமாக இறுக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நித்யா
திடீர் தாக்குதலால் தமிழ்ச்செல்வி நிலைகுலைந்த சூழலில், அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை அந்தப் பெண் பறித்துள்ளார். தமிழ்ச்செல்வி சத்தம் போட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவருடன் இருந்த சிறுவன் ஒரு வெள்ளைத் துணியால் தமிழ்ச்செல்வியின் வாயை அமுக்கிப் பிடித்துள்ளான்.
இதற்கிடையே ரயில் குரும்பூர் நிலையத்தை நெருங்கி வேகம் குறையத் தொடங்கியதும், சங்கிலியைப் பறித்த பெண்ணும் சிறுவனும் ரயிலில் இருந்து கீழே குதித்துத் தப்பியோட முயன்றனர். அதிர்ச்சியிலிருந்து மீண்ட தமிழ்ச்செல்வி சத்தமிட்டுக் கூச்சலிடவே, சக பயணிகள் உடனடியாகச் செயல்பட்டனர்.
ரயிலில் இருந்து இறங்கி ஓடிய இருவரையும் பயணிகள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் குரும்பூர் ரயில் நிலையத்திலேயே நெல்லை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட பெண் தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கொட்டாக்குறிச்சி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த நித்யா (35) என்பதும், அவருடன் இருந்தது 14 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, நித்யா மற்றும் சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சுமார் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள 3 பவுன் தங்கச் சங்கிலியும் பத்திரமாக மீட்கப்பட்டது.
பகலில் ஓடும் பயணிகள் ரயிலில், அதுவும் பெண்கள் பெட்டியில் சக பெண் பயணி ஒருவரே கழுத்தை இறுக்கி நகையைப் பறித்த இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments