Chennai ,May 23 : விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போதைய நடப்பு ஆண்டில் தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியாளர் சேவையின் கீழ், கண் மருத்துவ உதவியாளர் (Ophthalmic Assistant) பணியில் உள்ள 3 காலிப் பணியிடங்களை விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்புவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தகுதியான வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விளையாட்டுத் துறையையும், வீரர்களையும் உலகத் தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒலிம்பிக், சர்வதேசப் போட்டிகள், தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு அரங்குகளில் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வீரர்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்த 3 சதவீத வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் வீரர்கள், குறிப்பிட்ட சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் , அதன் விவரங்கள்
விண்ணப்பிக்கும் ஆண்டிற்கு முந்தைய கடந்த ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட விளையாட்டுச் சாதனைகள் மட்டுமே தகுதிக்குரியதாக ஏற்றுக்கொள்ளப்படும்.
குழு விளையாட்டுகளைப் பொறுத்தமட்டில் (Group Games), மாநில அளவிலான போட்டிகளில் குறைந்தபட்சம் 50 சதவீதப் போட்டிகளில் விண்ணப்பதாரர் நேரடியாகப் பங்கேற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்களின் சாதனைகள் அனைத்தும் ‘சீனியர்’ (Senior Level) பிரிவில் பெறப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும்.ஜூனியர் அளவிலான சாதனைகள் இதில் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற அல்லது வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இது தவிர தெற்காசிய கூட்டமைப்பு போட்டிகள், பாரா ஒலிம்பிக், ஆசிய பாரா போட்டிகள் மற்றும் சர்வதேச பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோருக்கான உலக விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்படும் போட்டிகளில் சாதித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
தேசிய அளவைப் பொறுத்தவரை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்திய தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மாநில அளவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற மாநில விளையாட்டுச் சங்கங்கள் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் .
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sdat.tn.gov.in வழியாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான அனைத்து அசல் விளையாட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கல்வி ஆவணங்களை இணையதளத்தில் உரிய வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதளப் பதிவு வரும் மே 25-ஆம் தேதி (25.05.2026) காலை 10:00 மணி முதல் தொடங்குகிறது. ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 24-ஆம் தேதி (24.06.2026) மாலை 5:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments