தென்காசி,May 23: ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கும் தொழிலையும் கூடுதலாகச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மணிகண்டன் தனது தோட்டத்தில் சட்டவிரோதமாகக் கள் விற்பனையில் ஈடுபடுவதாக ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறபட்டது . இதன் அடிப்படையில், ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) இசக்கிராஜா மற்றும் இரண்டு காவலர்கள் மணிகண்டனின் தோட்டத்திற்குச் சென்று சோதனை மேலும் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையின்போது, மணிகண்டனுக்கும் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது தள்ளுமுள்ளுவாக மாறியது. இந்த மோதலின் உச்சகட்டமாக சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தனது துப்பாக்கியை எடுத்து விவசாயி மணிகண்டனின் இரண்டு கால்களிலும் சுட்டார்.
தோட்டாக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டனை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறை நடவடிக்கை: விவசாயி ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, எல்லையைத் தாண்டி அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ. விசாரணையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற விதிகளின்படி, தென்காசி வருவாய் கோட்டாட்சியரின் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய ஆர்.டி.ஓ., கடந்த வாரம் தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனிடம் வாக்குமூலம் பெற்றார். சம்பவத்தன்று உண்மையில் என்ன நடந்தது, துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து மணிகண்டன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா மற்றும் சம்பவ இடத்தில் இருந்த மற்ற இரு காவலர்களிடம் விசாரணை நடத்தும் பொருட்டு, ஆலங்குளம் காவல் நிலையத்திலும் ஆர்.டி.ஓ. விரிவான விசாரணையை மேற்கொண்டார். காவல் நிலைய நாட்குறிப்புகள் மற்றும் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
தற்போது இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, பாதிக்கப்பட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று மணிகண்டன் தோட்டத்தில் இருந்த நிலை குறித்தும், அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே முன்விரோதம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் உறவினர்களிடம் கேட்டறியப்பட உள்ளதாக வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கபட்டன . அனைத்துத் தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னர், ஆர்.டி.ஓ. தனது இறுதி அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கவுள்ளார். இச்சம்பவத்தால் ஆலங்குளம் மற்றும் மருதம்புத்தூர் பகுதியில் இன்னமும் பரவலான பரபரப்பு நிலவி வருகிறது.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
திருநெல்வேலி : செப்டம்பர் 01, 2026 ; பள்ளிப் பருவமே தனித்திறமைகளை வெளிக்கொணரும் காலம் – சந்தீப் நந்தூரி திருநெல்வேலி:கங்கைகொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் நம்ம ஊரு குளோபல் பள்ளியின் ஆண்டு விழா “SYNAPSE 2026”, பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீ சண்முகப்பிரியா தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் மாரி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஆண்டு விழாவில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும்… Read more: “AI தொழில்நுட்பங்கள் மனித ஆற்றலுக்கு முழுமையான மாற்றாகாது” – சந்தீப் நந்தூரி.
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments