வீடு கட்ட இலவச மணல் கேட்டு குவாரி உரிமையாளரை மிரட்டிய விவகாரம் ! உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் இருவர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: ஏப்ரல் 02, 2026 ; நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் சீவலப்பேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலாமடை கிராமத்தில் சுந்தரராஜன் ப்ளு மெட்டல் என்ற பெயரில் எம்.சான்ட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை தாழையூத்து காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராமநாதன் மற்றும் காவலர் பாலசுப்ரமணியன் இருவரும் எம் சாண்ட் நிறுவனத்திற்கு வந்து வீடு கட்டுவதற்கு இலவசமாக மண் வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால் கிரஷர் மண்ணெல்லாம் கேரள மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளேன் என உரிமையாளர் தெரிவித்துள்ளார். நாங்கள் தாழையூத்து காவல் நிலையத்தில் பணிபுரிகிறோம் எனவே எங்களுக்கு கிரசர்மன் வேண்டுமென மிரட்டும் தொனியில் கேட்டுள்ளனர். அதற்கு கிரசர் கோரி நிறுவனத்தாரும் 10 டன் மண் தருவதாக கூறியுள்ளார். ஆனால் மறுநாள் சனிக்கிழமை 3 டாரஸ் லாரிகளில் 110 டன் மண் நிரப்பி தர வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் மிரட்டும் துணியில் கேட்டுள்ளதாக கூறுகின்றனர். தர மறுத்ததற்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்னகுமாரிடம், குவாரி உரிமையாளர் நடந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை அன்று நேரில் புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில் புகார் பெறப்பட்ட மறுநாளே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார், புகார் குறித்து உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் இருவரும் மீதும் விசாரணை எடுத்த உத்தரவிட்டார். இன்று முதற்கட்ட விசாரணை நடந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தாழையூத்து காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராமநாதன் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியம் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

வேலியே பயிரை மேய்வது போல காவல் காக்க வேண்டிய காவலர்களை மணலை கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் பணியிடை நீக்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் செயல்பாடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்திஉள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »