Madurai, June 4 : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நல்வாய்ப்பாக இந்த விபத்தின் போது குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சூலப்புரம் ஊராட்சியில் உள்ள உலைப்பட்டி கிராமத்தில் இந்த அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.தினமும் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் இங்கு வந்து கல்வி பயின்று சத்துணவு உட்கொண்டு செல்கின்றனர்.இந்த நிலையில் வழக்கம்போல அங்கன்வாடி மையம் இயங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேற்கூரைப் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன.விபத்து நடந்த கணத்தில் குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பான தூரத்தில் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.சிதிலமடைந்த நிலையில் ஆபத்தான சூழலில் உள்ள அந்தப் பழைய கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு அதே இடத்தில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான முறையில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்துப் பணிகள் தடைபடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.சேடபட்டி வட்டார ஊட்டச்சத்து அலுவலர் கலைவாணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அரசு அலுவலர்களின் முன்னிலையில் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கேற்ற மாற்று அரசு கட்டிடம் ஒன்று உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டது.இனிவரும் நாட்களில் புதிய கட்டிடம் தயாராகும் வரை குழந்தைகள் அந்தத் தற்காலிகப் பாதுகாப்பான கட்டிடத்தில் தங்கிப் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் விபத்து நடந்தவுடன் அலட்சியம் காட்டாமல் மாற்று கட்டிடத்தை உடனடியாக ஏற்பாடு செய்து தந்த மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு அதிகாரிகளின் விரைவான நடவடிக்கை நிம்மதியளிப்பதாகத் தெரிவித்தனர்.
பெரியகுளம் , June 6: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழகத்தின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் சூழல் மற்றும் அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் புதிய… Read more: அண்ணாமலை அமித்ஷாவின் ஒரு மாய மான்: பெரியகுளத்தில் கி.வீரமணி விமர்சனம்
சென்னை ,ஜூன் 5: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா,திமுக தலைமையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக,திமுகவின் தோல்வி குறித்தும்,அக்கட்சியின் தலைவர்களது தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார். ஆர்.கே. நகரில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா,”தம்பி இளவரசர் உதயநிதி அவர்களே,உங்களுக்கு உங்கள் தந்தை மு.க.ஸ்டாலின் மட்டும்… Read more: உதயநிதிக்கு படிப்பும் வரவில்லை,சினிமாவும் வரவில்லை: திமுக தோல்வி குறித்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
சென்னை,ஜூன் 5: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும்,அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான கே. அண்ணாமலை,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை அக்கட்சியின் மத்திய தலைமை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. டெல்லி மேலிடத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகளே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்று அண்ணாமலை பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும்,தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பிராந்திய அபிலாஷைகளை முன்னிறுத்தி,‘கள அரசியல்’ (Cult… Read more: பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவிப்பு ரஜினியிடம் மன்னிப்பு
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவரது விலகல் உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகக்கூடும் என்றும் அவர் தனியாகப் புதிய… Read more: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? ராஜினாமாவை ஏற்ற தேசிய தலைமை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திருநெல்வேலி, ஜூன் 4: தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) செயல்பாடுகள் மற்றும் பா.ஜ.க உட்கட்சி விவகாரங்கள் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கங்களை அளித்தார்.அப்போது தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியின் பினாமியாகச் செயல்பட்டு வருவதாக அவர் மிக முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் நாட்டின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை மற்றும் தலைமை குறித்துப் பேசிய நயினார்… Read more: காங்கிரஸ் பினாமியாக த.வெ.க.செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments