தேனி, May 23 : மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
கடந்த பத்து நாட்களில் மட்டும் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 105.31 ரூபாய்க்கும், டீசல் 96.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் விலை உயர்வு, பொதுமக்களை மட்டுமன்றி, அன்றாட வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வேரோடு உலுக்கியுள்ளது.
குறிப்பாக, தேனி மாவட்டத்தில் ஆட்டோ தொழில் செய்து வரும் ஓட்டுநர்கள் இந்த விலை உயர்வால் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்களின் குமுறல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
“தினமும் காலையில வண்டியைக் கிளம்பும்போதே நெஞ்சு படபடக்குது. பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கிட்டே போகுது. ஆனா, நாங்க பொதுமக்களிடம் சவாரிக்குக் கூடுதலாகப் பத்து ரூபாய் கூடக் கேட்க முடியல. கேட்டா அவங்களும் எங்களோட சண்டைக்கே வராங்க. அவங்க நிலமையும் எங்களுக்குப் புரியுது, எங்க நிலைமையையும் யாராலயும் புரிஞ்சுக்க முடியல. நாங்க என்ன பண்றதுன்னே தெரியாம தவிக்கிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பாதிப்பு என்பது வெறும் எரிபொருள் தேவையோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; அது அவர்களின் ஒட்டுமொத்தக் குடும்பப் பொருளாதாரத்தையும் முடக்கியுள்ளது. தினசரி சவாரிகள் மூலமாகக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் பெரும்பகுதி எரிபொருளுக்கே செலவாகிவிடுவதால், வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் மற்றும் குடும்பப் பராமரிப்புச் செலவுகளுக்குப் பணம் இல்லாமல் திணறி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. “வருடக் கணக்கில் எங்க வண்டியில வர்ற பள்ளிச் சவாரி பிள்ளைகளிடம், இந்த டீசல் விலை உயர்வைச் சமாளிக்க மாதாந்திரக் கட்டணத்தில் கூடுதலாக ஒரு 100 ரூபாய் கேட்டால் கூட, பொதுமக்கள் அதனைத் தருவதற்கு முன்வருவதில்லை. இதனால் வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருக்கிறது; கையில் ஒரு ரூபாய் கூட மிஞ்சுவதில்லை” என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்காததால், ஆட்டோக்களில் பயணிப்போரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழல் என்பது சர்வதேசப் பொருளாதாரப் பிரச்சினை என்றாலும், அதன் நேரடித் தாக்கம் தங்களின் சமையலறை வரை வந்துவிட்டதாக இந்த எளிய மனிதர்கள் வேதனைப்படுகிறார்கள். எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், வரிக் குறைப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் தேனி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை , ஜூன் 13 : தமிழகத்தில் சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 1,328 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பேணவும் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இந்த மாநிலம் தழுவிய சிறப்பு வேட்டை நடத்தப்பட்டுள்ளது. கடந்த மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம்… Read more: ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு செக்: 1,328 பேரை தூக்கிய தமிழ்நாடு போலீஸ்
வேலூர் , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக போலியாக போலீஸ் வேடமிட்டு வந்தபோது அவர் காவல்துறையிடம் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read more: ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி
நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில்… Read more: பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
பாட்னா , June 13 : பீகார் மாநிலம் பாட்னாவில் வாடிக்கையாளர்களைப் போல நடித்து, நகைக்கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாட்னாவின் திகா பகுதியில் உள்ள குறிச்சி பாலம் அருகே இந்த நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று இந்த கடைக்கு இரண்டு இளம் பெண்கள் நகைகளை வாங்குவது போல வந்துள்ளனர். கடையில் இருந்த நகைகளை காண்பிக்குமாறு அங்கிருந்த உரிமையாளரிடம் அவர்கள்… Read more: பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார். அங்கு அவருக்கும் நாகேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில்… Read more: குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments