தமிழக தேர்தல் முன் புதிய சர்ச்சை: விஜய் படமான “Jana Nayagan” தடை… ஆனால் ‘TN 2026 ரிலீஸ் ‘ ஏன்? ரசிகர்கள் கேள்வி

TN 2026 movie
vijay-jana-nayagan-delay-tn-2026-movie-controversy

சென்னை , ஏப்ரல் 4 : தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “ஜனநாயகன்” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ள நிலையில் அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘TN 2026’ என்ற திரைப்படம் தடையின்றி வெளியாகத் தயாராகி இருப்பது பெரும் விவாதமாக மாறியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாலும் தணிக்கைத் துறையின் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்களாலும் இப்படத்தின் வெளியீடு தற்காலிகமாகத் தாமதமாகி உள்ளது.

Also : சவுக்கு சங்கர் பேட்டி விவகாரம்: TVK ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிராக மதராஸ் உயர் நீதிமன்றம் “suo motu” அவமதிப்பு வழக்கு

இச்சமயத்தில் ‘TN 2026’ என்ற அரசியல் நையாண்டித் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 -ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திரைப்படத்தில் நடிகர் நட்ராஜ் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மற்றும் அவரது தோற்றம் அண்மையில் வெளியான டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஆகியவை நடிகர் விஜய்யை நேரடியாகப் பிரதிபலிப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.குறிப்பாக டீசரில் ஒரு முக்கியப் பிரமுகர் அரசியலுக்கு வருவது மற்றும் அவரைச் சுற்றி நடக்கும் விமர்சனக் காட்சிகள்  விஜய்யின் தற்போதைய அரசியல் நகர்வுகளைக் குறிவைத்துத் திட்டமிட்டு வைக்கப்பட்டவை என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த வெளியீட்டிற்கு விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. அக்கட்சியின் முக்கியப் நிர்வாகிகள் தங்களின் தலைவரது “ஜனநாயகன்” திரைப்படத்திற்குத் தேர்தல் விதிகளைக் காட்டி முட்டுக்கட்டை போடப்படும் நிலையில் அதே அரசியல் பின்னணியைக் கொண்ட விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் மற்றொரு திரைப்படத்திற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.இது தேர்தல் ஆணையத்தின் இரட்டை நிலையைாட்டுவதாக உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *