தமிழக சட்டசபை தேர்தல்: 27 தொகுதிகளுக்கான பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! தமிழிசை, எல்.முருகன் போட்டி..

image 10

ஏப்ரல் 03 – 2026 ; டெல்லி ; தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தலைமை அலுவலக பொறுப்பாளர் அருண் சிங் இந்த பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

பாஜக வேட்பாளர் பட்டியலில் தமிழக மக்கள் பெருமளவு எதிர்பார்த்த அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடவில்லை !

நான் ஏதாவது தவறு செய்தேனா? – மௌனப்படுத்தப்பட்டேன் ஆனால் தோற்கவில்லை: ராகவ் சதா வீடியோ சர்ச்சை

இந்த பட்டியலில் முன்னாள் கவர்னரும் மூத்த தலைவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தென் மாவட்டங்களில் களமிறங்கும் முக்கிய வேட்பாளர்கள்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பா.ஜ.க. முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியில் எஸ்.பி. பாலகிருஷ்ணன் களமிறங்குகிறார்.

அதேபோல, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் அனந்தன் அய்யசாமியும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி, விளவங்கோட்டில் எஸ். விஜயதரணி உள்ளிட்டோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

27 வேட்பாளர்களின் முழு விவரம்:
சென்னை மற்றும் வட மாவட்டங்கள்:

  • ஆவடி: எம். ராஜசிம்ம மகேந்திரா (எம். அஸ்வின்குமார்)
  • மயிலாப்பூர்: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
  • தளி: டாக்டர் நாகேஷ் குமார்
  • திருவண்ணாமலை: சி. ஏழுமலை
    கொங்கு மண்டலம் மற்றும் மேற்கு மாவட்டங்கள்:
  • ராசிபுரம் (தனி): டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்
  • மொடக்குறிச்சி: கீர்த்திகா சிவகுமார்
  • உதகமண்டலம்: போஜராஜன்
  • அவினாசி (தனி): டாக்டர் எல். முருகன்
  • திருப்பூர் (தெற்கு): எஸ். தங்கராஜ்
  • கோயம்புத்தூர் (வடக்கு): வானதி சீனிவாசன்
    காவிரி டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்கள்:
  • திருவாரூர்: கோவி சந்துரு
  • தஞ்சாவூர்: எம். முருகானந்தம்
  • கந்தர்வகோட்டை (தனி): சி. உதயகுமார்
  • புதுக்கோட்டை: என். ராமச்சந்திரன்
  • அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்
  • திருப்பத்தூர்: கே.சி. திருமாரன்
    தென் மாவட்டங்கள்:
  • மானாமதுரை (தனி): பொன். வி. பாலகணபதி
  • மதுரை தெற்கு: பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்
  • சாத்தூர்: நயினார் நாகேந்திரன்
  • ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன்
  • திருச்செந்தூர்: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
  • வாசுதேவநல்லூர் (தனி): அனந்தன் அய்யசாமி
  • ராதாபுரம்: எஸ்.பி. பாலகிருஷ்ணன்
  • நாகர்கோவில்: எம்.ஆர். காந்தி
  • குளச்சல்: டி. சிவகுமார்
  • பத்மநாபபுரம்: பி. ரமேஷ்
  • விளவங்கோடு: எஸ். விஜயதரணி

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் இந்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் விரைவில் தங்களது தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1225

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »