அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த அவர், நெல்லை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தார். திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்குக் கூடுதலாக எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் வசதியைக் கொண்டுவர வேண்டும் என்றும், மேலப்பாளையம் ஆவின் பின்புறத்தில் அரசு பள்ளி கட்டுவதற்கு நிதி ஒதுக்கியும் இன்னும் பணிகள் முடிவடையாததால், அதை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், நெல்லை குலவணிகர்புரம் பகுதியில் நிலுவையில் உள்ள Y வடிவ மேம்பாலம் அமைக்கும் பணிகளை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட 41 நீண்டகால சிறைவாசிகளை முன்விடுதலை செய்வது குறித்தும், பிற சிறை வாசிகளுக்கு வட மாநிலங்களைப் போல ‘பார்லாக்’ (Furlough) விடுப்பு முறை வழங்குவது குறித்தும் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இது தொடர்பான கோப்பு தலைமைச் செயலாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் தொடர்ந்து அதே பதவியில் நீடித்து வருவது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக – பாஜக மறைமுகக் கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) போன்ற பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதும், சட்டமன்றத்தில் துணிச்சலாகத் தீர்மானம் நிறைவேற்றியதும் திமுக அரசுதான் என விளக்கமளித்தார். மேலும், அரசியல் விமர்சனங்கள் கண்ணியமான முறையில் இருக்க வேண்டும் என்றும், பெண்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையிலோ, இரட்டை அர்த்தத்திலோ தலைவர்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்துக் குறிப்பிட்ட அவர், கடந்த 2009 முதல் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் தங்கள் கட்சி தனிச் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் தற்போதைய புதிய விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளதால், வரவிருக்கும் தேர்தலிலும் மனிதநேய மக்கள் கட்சி தனது சொந்த தனிச் சின்னத்திலேயே போட்டியிடும் என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ். ரசூல் மைதீன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
( Visual in Live u )அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா பேட்டி…