காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?

திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது.

ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது.

உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.

இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு உடல் உடனடியாக தகவமைத்துக் கொள்ள முடியாமல், நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுபோன்ற சூழலில் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ரத்தினகுமார் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அவர் கூறுகையில்,

கடுமையான வெயில் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக, இந்த நேரத்தில் சிறு குழந்தைகளை வெயிலில் விளையாடவோ, வெளியே செல்லவோ அனுமதிக்கக் கூடாது.

மேலும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

பள்ளிகளில் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்ற தயக்கத்தில், சில பெண் குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.

தாகத்தைத் தணிக்க வெறும் தண்ணீர் மட்டுமின்றி, எலுமிச்சை சாறு, மோர் மற்றும் உப்பு சேர்த்த நீராகாரம் எனப்படும் கஞ்சித் தண்ணீர் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

அதிக உடல் சோர்வு ஏற்பட்டால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ORS கரைசலை அருந்தலாம்.

அதேசமயம், தற்போது வரை நெல்லை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் அதீத வெப்பம் அல்லது காய்ச்சல் காரணமாக அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வருங்காலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கொளுத்தும் வெயிலில்… பாதுகாப்பாக இருப்போம்… ஆரோக்கியமாக இருப்போம்!திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது.

ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது.

உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.

இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு உடல் உடனடியாக தகவமைத்துக் கொள்ள முடியாமல், நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுபோன்ற சூழலில் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் ரத்தினகுமார் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அவர் கூறுகையில்,

கடுமையான வெயில் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக, இந்த நேரத்தில் சிறு குழந்தைகளை வெயிலில் விளையாடவோ, வெளியே செல்லவோ அனுமதிக்கக் கூடாது.

மேலும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

பள்ளிகளில் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்ற தயக்கத்தில், சில பெண் குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.

தாகத்தைத் தணிக்க வெறும் தண்ணீர் மட்டுமின்றி, எலுமிச்சை சாறு, மோர் மற்றும் உப்பு சேர்த்த நீராகாரம் எனப்படும் கஞ்சித் தண்ணீர் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

அதிக உடல் சோர்வு ஏற்பட்டால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ORS கரைசலை அருந்தலாம்.

அதேசமயம், தற்போது வரை நெல்லை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் அதீத வெப்பம் அல்லது காய்ச்சல் காரணமாக அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வருங்காலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கொளுத்தும் வெயிலில்… பாதுகாப்பாக இருப்போம்… ஆரோக்கியமாக இருப்போம்!

news desk
news desk
Articles: 103

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *