Chennai , May 10 : தமிழகத்தின் 10 லட்சம் கோடி கடன், White Paper, கனிமவள கொள்ளை குறித்து விஜய் அறிவிப்புக்கு முன்னாள் IAS அதிகாரி சகாயம் அளித்த முக்கிய ரியாக்ஷன் .
தமிழக அரசியல் களத்தில் “White Paper” என்ற வார்த்தை மீண்டும் தீவிரமாக பேசப்பட தொடங்கியுள்ளது. தமிழகத்தின் நிதிநிலை, 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை, கனிமவள கொள்ளை, நிர்வாக சீர்திருத்தம் போன்ற விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள “வெள்ளை அறிக்கை” அறிவிப்புக்கு முன்னாள் IAS அதிகாரி சகாயம் அளித்த பதில் தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் வெளிப்படையாக “தவறுகளை அனுமதிக்க மாட்டேன்” என்று அறிவித்திருப்பது தமிழக மக்களிடம் புதிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளதாக சகாயம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஊழலை அகற்றி நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சிகள் நடந்தால் தமிழ்நாடு மீண்டும் வலுவான பாதைக்கு திரும்பும் என்றும் அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விஜயின் White Paper அறிவிப்புக்கு சகாயம் வரவேற்பு
சமீபத்தில் ஊடகங்களுக்கு பேசிய சகாயம், “மிக சவாலான ஒரு பணி தமிழக அரசுக்கு காத்திருக்கிறது. செலவுகளை குறைத்து, ஊழலை அகற்றி உறுதியான இலட்சியத்தோடு பயணித்தால் மாற்றம் சாத்தியம்” என்று தெரிவித்தார்.
மேலும், “இன்றைக்கு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் பகிரங்கமாக ‘தவறுகளை அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார். அதுவே ஒரு நல்ல அறிகுறி. இந்த அறிவிப்பு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் கூறினார்.
அரசுக்கு தங்களை போன்ற அதிகாரிகளின் ஆலோசனை தேவைப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சகாயம், “நான் மிகச் சிறியவன். ஆனால் 30 ஆண்டுகளாக நேர்மையான போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறேன். என்னை உருவாக்கிய தமிழ் சமூகத்திற்காக தொடர்ந்து என்னுடைய பங்களிப்பை செய்வேன்” என்று கூறினார்.
கனிமவள கொள்ளை குறித்து மீண்டும் பேசப்பட்ட பழைய சர்ச்சை
தமிழகத்தில் கனிமவள கொள்ளை விவகாரம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் ஒரு பெரிய பிரச்சினை. குறிப்பாக, கிரானைட் ஊழல் விவகாரத்தை இந்திய அளவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அதிகாரிகளில் முக்கியமானவர் சகாயம்.
அந்த விவகாரம் குறித்து பேசிய அவர், “2010-க்கு முன்பாக இந்தியாவிலும் ஆசியாவிலும் மிகப்பெரிய Granite Scam-ஐ நான் வெளிக்கொண்டு வந்தேன். ஆனால் இன்றுவரை அதில் பெரிய முன்னேற்றம் இல்லை. நமது அமைப்பு எவ்வளவு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதனிடையே, “மாண்புமிகு விஜய் அவர்களின் ஆட்சியில் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்ற அவரது கருத்து தற்போது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
10 லட்சம் கோடி கடன்.. தமிழகத்தின் மிகப்பெரிய சவால்?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த கேள்விக்கும் சகாயம் நேரடியாக பதிலளித்தார். “தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பது உண்மை. ஒவ்வொரு ஆண்டும் அந்த கடனுக்கான வட்டிக்கே பெரும் தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், “செலவுகளை கட்டுப்படுத்தி, ஊழலை அகற்றி, உறுதியான நிர்வாகத்தோடு சென்றால் ஒரு காலகட்டத்தில் இந்த நிலைமையை மாற்ற முடியும்” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
விஜய் அறிவித்துள்ள White Paper குறித்த கேள்விக்கு, “அது அருமையான முடிவு. அந்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என்று கூறியதை நாம் வரவேற்க வேண்டும்” என்று சகாயம் தெரிவித்தார்.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments