
Chennai , May 10 : தமிழகத்தில் 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவச திட்டம் அமலுக்கு வந்தது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் Free தொடரும் என G.O வெளியீடு.
தமிழகத்தில் புதிய அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்த 200 யூனிட் இலவச மின்சார திட்டம் தற்போது அதிகாரப்பூர்வ அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பிறகு வெளியிடப்பட்ட முதல் முக்கிய அரசாணையாக இது பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் வரை முழுமையாக இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Also Read : விஜய் வைத்த White Paper கோரிக்கை.. IAS அதிகாரி சகாயம் சொன்ன அதிர்ச்சி உண்மை!
அதே நேரத்தில், 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகை தொடரும் என்றும் அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளக்கம் வெளியானதன் மூலம் பொதுமக்களிடையே இருந்த பெரிய குழப்பத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
500 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு என்ன சலுகை?
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களின்படி, இரண்டு மாத மின்கணக்கீட்டு முறையில் 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை முழுமையாக கட்டண விலக்கு வழங்கப்படும்.
இதனால், ஒரு குடும்பம் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை மட்டுமே பயன்படுத்தியிருந்தால், அவர்களுக்கு மின்கட்டணம் பூஜ்யமாக இருக்கும். அதாவது “Zero Bill” நடைமுறை அமலுக்கு வரும். இந்த திட்டம் வீட்டு மின்சார இணைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு என்ன நடக்கும்?
புதிய அறிவிப்பு வெளியானபோது, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்தது.
ஆனால் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள விளக்கத்தில், அந்த சலுகை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் தொடர்ந்து 100 யூனிட் Free சலுகையை பெறுவார்கள்.
இதனால் நடுத்தர மற்றும் அதிக மின்சார பயன்பாடு கொண்ட குடும்பங்களுக்கும் ஒரு வகை நிம்மதி கிடைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மின்சார GO
எரிசக்தித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா IAS கையெழுத்திட்டுள்ள இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள், மின்கணக்கீட்டாளர்கள் மற்றும் மின் விநியோக அலுவலகங்களுக்கு இந்த புதிய கட்டண நடைமுறை உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றிலிருந்து தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் மின்கணக்கீடு மேற்கொள்ளப்பட்டாலும், புதிய Free Unit நடைமுறையின் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்கணக்கீட்டு தேதி மாறுபடும் நிலையில், இனி கணக்கெடுக்கும் நாளிலிருந்தே புதிய சலுகை நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசுக்கு ரூ.1730 கோடி கூடுதல் செலவு
இந்த புதிய திட்டத்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1730 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 2 கோடியே 23 லட்சம் வீட்டு மின்சார இணைப்புகள் உள்ளதாகவும், இந்த திட்டம் முழுமையாக வீட்டு மின்நுகர்வோருக்கே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த சலுகை பொருந்தாது.
இந்த புதிய மானிய செலவு வரவிருக்கும் தமிழக பட்ஜெட்டில் சேர்க்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.





