“நாளை காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு”.. ஆளுநர் மாளிகையில் 1 மணி நேர பரபரப்பு.. CPI, CPM, VCK, காங்கிரஸ் ஆதரவு உறுதி

image 179

Chennai, May 9 : TVK தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார். CPI, CPM, VCK உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு உறுதி செய்த நிலையில் ஆளுநர் மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படும் சூழலில், தமிழக வெற்றிக்கழக தலைவர் திரு விஜய் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பரபரப்பான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், TVK தொண்டர்கள் ஆளுநர் மாளிகை வெளியே திரளாக குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read : “தீபாவளி போல தமிழகமே கொண்டாட்டம்”.. 120 எம்எல்ஏ ஆதரவுடன் விஜய் ஆட்சி உறுதி – நெல்லையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய தவெக தொண்டர்கள்

CPI, CPM, விடுதலை சிறுத்தைகள் கட்சி, IUML, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கடிதங்களை வழங்கிய நிலையில், தமிழக அரசியல் களம் முழுவதும் தற்போது விஜய் தலைமையிலான புதிய ஆட்சியை நோக்கி திரும்பியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் ஒரு மணி நேர ஆலோசனை : விஜயுடன் சேர்ந்து கூட்டணி மற்றும் ஆதரவு கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்றிருந்தனர். வழக்கமாக ஆதரவு கடிதங்கள் மட்டும் வழங்கப்படும் சூழலில், இந்த முறை சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் சென்றது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு வன்னியரசு தொலைபேசி வாயிலாக பேசியபோது, “தமிழக வெற்றிக்கழகத்திற்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும், “முதலில் மதியம் 3:15 மணிக்கான நேரம் கேட்கப்பட்டது. ஆனால் ஆளுநர் தரப்பில் நாளை காலை 10 மணி என்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெறும்” என்றும் கூறினார்.

இந்த ஆதரவு அரசியல் லாபத்திற்காக அல்ல என்றும், மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படக்கூடாது என்பதே முக்கிய நோக்கம் என்றும் வன்னியரசு வலியுறுத்தினார். “தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடியான சூழலில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும். மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். அதே நேரத்தில், வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில்தான் VCK, CPI, CPM உள்ளிட்ட கட்சிகள் இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அமைச்சரவை குறித்து இன்னும் முடிவு இல்லை : விஜயுடன் சேர்ந்து எத்தனை பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கட்சியின் உள்கட்டமைப்பு ஆலோசனைகளுக்குப் பிறகே அந்த முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் “திருமாவளவன் துணை முதல்வராக வருவாரா?”, “VCK-க்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்குமா?” போன்ற கேள்விகள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *