‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

சென்னை,May 28 : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய சிறப்பு ரோந்துப் பிரிவை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

image 563

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பொது இடங்களில் அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் இந்த அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான கோப்புகளில் முதலமைச்சர் ஏற்கனவே கையெழுத்திட்டிருந்த நிலையில், இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளைத் தமிழக காவல் துறை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. குறிப்பாக, ஐ.ஜி பவானீஸ்வரி இந்த சிங்கப்பெண் அதிரடிப்படையின் தலைவராக நியமிக்கப்பட்டு, இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பெண் காவலர்களுக்கான பிரத்தியேக சீருடை வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முன்னின்று கவனித்து வந்தார்.

வழக்கமான காவல் துறையினரின் சீருடையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், இந்த சிறப்புப் படையினருக்கு எனத் தனித்துவமான சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்படை நீல நிறச் சட்டை (Navy Blue), காக்கி நிறக் காற்சட்டை (Pant) மற்றும் கறுப்பு நிறத் தொப்பி (Black Cap) ஆகியவை அடங்கிய இந்த புதிய சீருடை நேற்று பெண் காவலர்களுக்கு முறைப்படி வழங்கப்பட்டது. இந்த புதிய சீருடை அணிந்த பெண் காவலர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

also read : உக்ரைன் போரில் புதிய திருப்பம்.. கீவ்வை குறிவைத்த ரஷ்யா, அதிர்ச்சியூட்டும் அமெரிக்கா

முன்னதாக, இத்திட்டத்தின் தொடக்க விழா கடந்த 27-ஆம் தேதி ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முதலமைச்சர் விஜய்யின் திடீர் டெல்லி பயணம் காரணமாக இந்நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் திரும்பியுள்ள நிலையில், இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமையான நாளை முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது.

இதையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் விழா ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரத்தியேக ‘சிங்கப்பெண்’ ரோந்து வாகனங்கள் அனைத்தும் விழா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய சீருடை அணிந்த பெண் காவலர்கள் நேற்று மைதானத்தில் அணிவகுப்பு மற்றும் ரோந்து வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட முன் தயாரிப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். மேலும், இந்த வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு முன்னோட்டப் பேரணியும் (Rally) நேற்று நடத்தப்பட்டு, தயார் நிலை உறுதி செய்யப்பட்டது.

நாளை காலை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, இந்த சிங்கப்பெண் அதிரடிப்படையின் ரோந்து வாகனக் கொடியசைத்து முறைப்படி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவைத் தொடர்ந்து, முதற்கட்டமாகச் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த சிங்கப்பெண் அதிரடிப் படையின் ரோந்து வாகனங்கள் முழு வீச்சில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களுக்கு அருகிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளன என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1043

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »