திண்டுக்கல்,, மே 15: ஒட்டன்சத்திரம் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை திருட்டு – தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் போலீசார் தீவிர விசாரணை…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதி சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மஞ்சுளா மற்றும் 7 மாத குழந்தை அணியா ஸ்ரீ ஆகியோரை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர் இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த மஞ்சுளா உடலை பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர் பிரேத பரிசோதனை முடிந்து உடலை வாங்கிய உறவினர்கள் இறந்தவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க நகையை காணவில்லை என சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் மூன்று வாகனங்களை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு ஓட்டுநர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














