Trichy , May 16: திருச்சி கிழக்கு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் ! திமுக அரசின் திட்டங்களை செயற்படுத்தாவிட்டால் தமிழக சட்டமன்றம் நடைபெறாது – திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் காட்டமான பேட்டி…
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன். இன்று கட்சி அலுவலகத்தில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அனைத்து ராதாகிருஷ்ணன் கூறும்போது….
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் வாபஸ் பெற்றுள்ளார். இதனால் நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுக சார்பில் தலைவர் ஸ்டாலின் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடிகர் முகத்தில் கரியை பூச வேண்டும். அதற்காக முழுமூச்சாக செயல்படுவோம்.
தேர்தலில் ஒரு மாயாஜால அலை அடித்து எதிரணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நாங்கள் போட்டதற்கான காரணங்கள் குறித்து அலசி ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக குழு ஏற்பாடு செய்திருக்கிறோம். வெற்றி பெற்றவுடன் மகளிர்க்கு உரிமை தொகையாக 2500 தருவேன் என்று கூறி விட்டு இப்போது 1000 ரூபாய் கொடுத்தால் அது சரியா ?
பேருந்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் என வாக்குறுதி கொடுத்தார் அது செய்யப்பட்டதா ? கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் விஜய் நிறைவேற்றவில்லை. எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தை ஆண்டிருக்கின்றனர் குறிப்பாக காமராஜர், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, ஜெயலலிதா என பல தலைவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் சிறப்பாக செய்திருந்தாலும் அவர்களை விட மிகச் சிறப்பாக ஒவ்வொரு நாளும் மக்களுக்கான சிறப்பான திட்டங்களை தேர்ந்தெடுத்து அறிவித்து செயல்படுத்தியவர் தலைவர் ஸ்டாலின். பெண்களுக்கான பாதுகாப்பு முழுமையாக செயல்படுத்தியது திமுக அரசு. திமுக அரசில் அறிவித்த திட்டங்கள் இப்போதைய ஆட்சியிலும் தொடரும் அப்படி நிறைவேற்றப்படவில்லை என்றால் தமிழக சட்டமன்றமே நடைபெறாது. தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் கவர்னர் ஆட்சி தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போதைய அரசுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.
ஆனால் அதிமுகவின் நிலை வேறு அவர்களை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பிரிவினர் தற்பொழுது ஆளும்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். இந்த நிலை மாறும். தலைவர் ஸ்டாலின் கூறியது போல இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மீண்டும் புதிய தெம்புடன் தேர்தலை எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து ஏழு முறையாக வெற்றி பெற்றதன் ரகசியம் குறித்து கேட்டபோது.. இதுவரை நான் எந்த மக்களிடமும் ஜாதி, மத பாரபட்சம் பார்த்து பழகுவதில்லை, தொகுதியில் அனைவரையும் என் மக்களாக நினைக்கிறேன் அதுதான் காரணம் என மிக காட்டமாக அரசியல் குறித்து பேசியவர், இறுதியில் கலகலப்பாக பேசி முடித்தார்.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments