தஞ்சாவூர், May 21 : திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றை முழுமையாக தூர்வார தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமலைராஜன் ஆற்றின் கடைமடை பகுதிவரை தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிட்டி யூனியன் வங்கியின் சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் சிட்டி யூனியன் வங்கியின் ஓய்வு பெற்ற துணைப் பொது மேலாளர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த நிறுவனமாக சிட்டி யூனியன் வங்கி கடந்த பத்து ஆண்டுகளாக சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீர்வழிப் பாதைகளை தூர்வாரும் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார். இந்தப் பணிகள் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த ஆண்டில் திருமலைராஜன் ஆற்றின் கடைமடை பகுதிவரை தூர்வாருவதற்காக முதற்கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளில் முழுப் பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயை விவசாயிகள் சந்தித்து 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதாகவும் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். அதில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஏரி, குளம், குட்டைகளில் இருந்து மண் எடுத்து விவசாய நிலங்களை சமப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும், குடிமராமத்து திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்ததாக கூறினார்.
இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி மற்றும் குளங்களில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை விவசாயிகள் சார்பில் வரவேற்பதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், காவிரி ஆற்றை முழுமையாக தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் அவசரத் தேவையாக உள்ளதாகவும் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார். மத்திய அரசு கங்கை நதியை தூர்வாரியதுபோல், காவிரி ஆற்றையும் தூர்வாரும் நோக்கில் “நடந்தாய் வாழி காவிரி” என்ற திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார். ஆனால் அந்தத் திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
எனவே, தற்போதைய அரசு அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றின் தொடக்கப் பகுதிமுதல் கடல்சேரும் முகத்துவாரம்பரை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
காவிரி டெல்டா பகுதிகளில் நீர்வள பாதுகாப்பு, நிலத்தடி நீர் உயர்வு மற்றும் விவசாய உற்பத்தி மேம்பாட்டிற்கு ஆறுகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை சீரமைப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருப்பதாகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இதுபோன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments