சினிமா சிறப்பு செய்தி : தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான சி. ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம், வருகிற ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் சுதீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் முறைப்படி அறிவித்துள்ளனர்.
திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பான்-இந்தியாத் திரைப்படமாக வெளியாகவுள்ளது. பெரும் பொருட்செலவில், ஆக்ஷன், அட்வென்ச்சர் மற்றும் காமெடி கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் சுதீப் கிஷனுக்கு ஜோடியாக பிரியா அப்துல்லா நடித்துள்ளார். இவர்களுடன் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான ராஜசுந்தரம், சம்பத்ராஜ், அன்புதாசன், யோகஜே, கிரண் கொண்டா மற்றும் மகாலட்சுமி சுதர்சன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
பொதுவாக முன்னணி நடிகர்களின் வாரிசுகள் நடிப்பில் களம் இறங்குவதே வழக்கம் என்ற நிலையில், ஜேசன் சஞ்சய் நடிப்பைத் தேர்ந்தெடுக்காமல், திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தடம் பதிக்கிறார். லண்டன் மற்றும் கனடாவில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரைக்கதை எழுதுதல் தொடர்பான படிப்புகளை முடித்தவர் என்பதால், இவரது முதல் படைப்பு எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வம் சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களிடையேயும் தொடக்கம் முதலே அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வெளியான இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்தது. நிலம், நீர், காற்று மற்றும் பணத்தின் மதிப்பு உயர்ந்து வரும் வேளையில், மனிதர்களின் மதிப்பு என்னவாகிறது என்ற பின்னணியை ஒட்டி இந்த டீசர் அமைக்கப்பட்டிருந்தது.
திரைப்படம் குறித்து ஜேசன் சஞ்சய் முன்னதாகப் பகிர்ந்து கொண்ட போது, பயமில்லாத, சுதந்திரமான, அதே சமயம் இந்தச் சமூகத்தால் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு தனிமனிதன், தன் இலக்குகளை நோக்கி எவ்வாறு நகர்கிறான் என்பதை மையமாகக் கொண்டு இத்திரைக்கதை நகரும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘வேட்டை’, ‘கொள்ளை’ மற்றும் ‘காமெடி’ நிறைந்த விறுவிறுப்பானதொரு சினிமா அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்கு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இத்திரைப்படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சூழலில், ஜூலை 31 ஆம் தேதி படம் வெளியாகும் என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை , ஜூன் 29: திரையுலகைச் சார்ந்த பிரபலங்களின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்கள் தமிழகத்தில் எப்போதும் உற்றுநோக்கப்படும் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா விரைவில் அரசியலில் களம் இறங்கப் போகிறார் என்ற செய்தி கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. ரசிகர் மன்றக் கூட்டத்தில் பேசப்பட்ட சில கருத்துக்கள் இந்த வதந்திக்கு வித்திட்ட நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி… Read more: அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? பல கேள்விகளுக்கு பதிலளித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சினிமா செய்தி , ஜூன் 24:தமிழ் திரையிசையின் பொற்காலத்தை வடிவமைத்த இரு மாபெரும் ஆளுமைகளான கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று ஒரே நாளில் தற்செயலாக அமைந்திருப்பது ஒரு வரலாற்று சுவாரசியமாகும். இவர்களது கூட்டுறவில் உருவான பாடல்கள் வெறும் பொழுதுபோக்குக் கலைவடிவமாக சுருங்கிவிடாமல், பல தலைமுறைகளைக் கடந்தும் தமிழர்களின் அன்றாட வாழ்வியலோடும் உணர்வுகளோடும் பின்னிப்பிணைந்திருக்கின்றன. எளிய பாமரனுக்கும் புரியும் வகையிலான தத்துவ வரிகளை மனதை வருடும் மெல்லிசையில் கடத்தியதே இந்த… Read more: கண்ணதாசன் – எம்எஸ்வி பிறந்தநாள் சிறப்பு ! ஒருவர் எழுத்தால் மாயம்… மற்றொருவர் இசையால் அதிசயம்!
சினிமா செய்தி , ஜூன் 23: திரையுலகில் இருந்து அரசியல் களத்திற்கு நகர்ந்து இன்று தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்திருக்கும் விஜய் குறித்த சுவாரசியமான பின்னணித் தகவல் ஒன்றை இயக்குநர் பேரரசு பகிர்ந்துள்ளார். தொடக்க காலத்தில் இருந்தே மக்கள் மற்றும் ரசிகர்களுடன் விஜய் பேணி வந்த நெருக்கமான உறவே அவரை இன்று இந்த உயரிய நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இயக்குநர் பேரரசு மற்றும் முதலமைச்சர் விஜய் கூட்டணியில் உருவான ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’… Read more: “விஜய் கால்ஷீட் கொடுக்க 3 கண்டிஷன் போடுவாங்க ..!” இயக்குநர் பேரரசு உடைத்த அதிர்ச்சி ரகசியம்
ஹைதராபாத் ,ஜூன் 19 : ஹைதராபாத் தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலியான விவகாரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜூன் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சிறப்பு காட்சியைக் காண்பதற்காகத் திரையரங்கிற்கு வந்திருந்த ரேவதி… Read more: புஷ்பா 2 படக் கூட்ட நெரிசல் வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் சம்மன்
சென்னை ,ஜூன் 17 : தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை கௌதமி. இவர் தனக்குச் சொந்தமான சொத்துகளை அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களை அளித்திருந்தார். இந்த புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஏழு வழக்குகளை முன்வைத்து தற்போது அமலாக்கத்துறை தனது அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளது. நடிகை கௌதமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு… Read more: நடிகை கௌதமியின் பகீர் புகார்: அதிரடியாக களமிறங்கிய அமலாக்க துறை … என்ன நடந்தது?
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments