திருநெல்வேலி : செப்டம்பர் 01, 2026 ; பள்ளிப் பருவமே தனித்திறமைகளை வெளிக்கொணரும் காலம் – சந்தீப் நந்தூரி
திருநெல்வேலி:
கங்கைகொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் நம்ம ஊரு குளோபல் பள்ளியின் ஆண்டு விழா “SYNAPSE 2026”, பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீ சண்முகப்பிரியா தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் மாரி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
ஆண்டு விழாவில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் சந்தீப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மாணவர்களின் வாழ்க்கையில் பள்ளிப் பருவம் என்பது அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து, அவற்றை வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த காலகட்டம் என்று குறிப்பிட்டார்.
வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், பள்ளி சார்பில் நடத்தப்படும் கலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் தயக்கமின்றி பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசிய சந்தீப் நந்தூரி, செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பங்கள் மனிதர்களின் பணிகளை எளிதாக்குவதற்காக மட்டுமே உதவுகின்றன என்றும், அவை ஒருபோதும் மனிதர்களின் ஆற்றலுக்கு முழுமையான மாற்றாக அமைய முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், மாணவர்கள் பாடப் புத்தகங்களை மட்டுமே சார்ந்திருக்காமல், தினமும் செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு வகையான புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோல், தேவையற்ற Screen Time-ஐ குறைத்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பள்ளியின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீ சண்முகப்பிரியா மற்றும் தாளாளர் மாரி கார்த்திகேயன் ஆகியோரின் கல்விப் பணிக்கான அர்ப்பணிப்பை பாராட்டிய சந்தீப் நந்தூரி, மாணவர்களின் கல்வி மட்டுமின்றி கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தி வரும் திறமைகளையும் பாராட்டினார்.
ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்வாக மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், நடனம், இசை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் சிறப்பாக கலைநிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கும், அவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள், அவர்களது தன்னம்பிக்கையையும் படைப்பாற்றலையும் மேலும் வளர்க்கும் வகையில் அமைந்ததாக விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
கல்வியோடு தனித்திறமை…
தொழில்நுட்பத்தோடு மனித ஆற்றல்…
உடல் ஆரோக்கியத்தோடு விளையாட்டு…
என மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெற்ற SYNAPSE 2026 ஆண்டு விழா, நம்ம ஊரு குளோபல் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நிறைவடைந்தது.பள்ளிப் பருவமே தனித்திறமைகளை வெளிக்கொணரும் காலம் – சந்தீப் நந்தூரி

என மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெற்ற SYNAPSE 2026 ஆண்டு விழா, நம்ம ஊரு குளோபல் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நிறைவடைந்தது.