சென்னை , ஜூன் 8 : தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை வரும் ஒன்பதாம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து, இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வாகனங்களின் சேவையைத் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.ஏற்கனவே இருமுறை திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தத் தொடக்க விழா, தற்போது ஒன்பதாம் தேதி உறுதியாக நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிப் படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.அதன்படி, தற்போதைய அரசு பொறுப்பேற்ற பின்னர் இதற்கான கோப்புகளில் கையெழுத்திடப்பட்டு, கடந்த சில மாதங்களாகப் படை உருவாக்கம் மற்றும் கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.இதனிடையே, இதற்கான தொடக்க விழா இரண்டு முறை வெவ்வேறு தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் அவை தள்ளிப்போயின.இந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்து, தொடக்க விழாவிற்கான இறுதி ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக மூத்த காவல் துறை அதிகாரி ஐ.ஜி.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.இப் படை முழுவதும் முதலமைச்சரின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.ஐ.ஜி.பவானீஸ்வரியின் தலைமையின்கீழ், கண்காணிப்பாளர்கள் (SP), துணைக் கண்காணிப்பாளர்கள் (DSP) மற்றும் ஆய்வாளர்கள் (Inspectors) உள்ளிட்ட மொத்தம் 36 அனுபவம் வாய்ந்த சிறப்பு காவல் அதிகாரிகள் முதற்கட்டமாக இந்தப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.குற்றத்தடுப்பு மற்றும் விரைவு நடவடிக்கைகளில் தனி முத்திரை பதித்த அதிகாரிகள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படைப் பிரிவினருக்கான பிரத்யேகச் சீருடைகள், அவற்றின் நிறங்கள் மற்றும் சின்னங்கள் குறித்த அதிகாரப்பூர்வப் புகைப்படங்களை அரசு அண்மையில் வெளியிட்டிருந்தது.தற்போது இந்த அதிகாரிகளுக்கான சீருடைகள், நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ரோந்துப் பணிக்கான வாகனங்கள் அனைத்தும் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பொது இடங்களிலும், இணைய வழியிலும் (Cyber Crimes) நிகழும் குற்றங்களைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தான நேரங்களில் மிக விரைவாகப் பாதுகாப்பை வழங்குவதே இந்த அதிரடிப்படையின் முக்கிய நோக்கமாகும்.குறிப்பாக, பெண்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவன வளாகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் இதர பொது இடங்களில் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்குத் தீவிரக் கண்காணிப்பு மற்றும் தொடர் ரோந்துப் பணிகளை இந்தப்படையினர் மேற்கொள்ள உள்ளனர்.அவசரக் காலங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்படையினருக்கு நவீனத் தொடர்புச் சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
தொடக்க விழா தள்ளிப்போனதைத் தொடர்ந்து, எழும்பூர் மைதானத்தில் உள்ளரங்குப் பணிகள் மற்றும் வாகனப் பரிசோதனைகள் தற்போதும் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றன.ஒன்பதாம் தேதி முதலமைச்சர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கான அனைத்துப் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளையும் காவல் துறையினர் இறுதி செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments