சென்னை , ஜூன் 26: மின்சாரத்துறையின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் துறையிலுள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மின்சாரத்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அவர்,
மின்சாரத்துறையில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து அவை சரி செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல பிரிவுகளில் தேங்கிக் கிடக்கும் பதவி உயர்வுகளை வழங்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறினார். ஊழியர்களின் இத்தகைய நீண்டகாலக் குறைகளைக் களைவதே தற்போதைய முதன்மைக் குறிக்கோள் என்றும் அவர் விளக்கினார்.
சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை டெண்டர் தமிழக அரசு ரத்து: முறைகேடு புகாரால் அதிரடி
துறையின் மனிதவளத் தேவையை ஈடுகட்டுவது குறித்துப் பேசிய அவர் முதற்கட்டமாக இந்த ஆண்டிற்குள் 20,000 புதிய பணியாளர்களைத் துறைக்குள் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் இணையும் பட்சத்தில் மின்சார வாரியத்தின் செயல்பாட்டுத் திறனும் நிர்வாகக் கட்டமைப்பும் குறிப்பிடத்தக்க அளவு உயரும் எனத் தெரிவித்த அமைச்சர் அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்குள் துறையிலுள்ள ஒட்டுமொத்த காலிப் பணியிடங்களையும் படிப்படியாக முழுமையாக நிரப்புவதே அரசின் இலக்கு என்றும், அதற்கான பணிகள் தடையின்றித் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
மாலை நேரங்களில் சோலார் எனப்படும் சூரியசக்தி மின் உற்பத்தி நின்ற பிறகு ஏற்படும் மின் தேவையைச் சமாளிப்பதே தற்போதைய சவாலாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் நிர்மல் குமார் அந்த குறிப்பிட்ட நேரங்களில் வெளியில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்தச் சூழலை நிரந்தரமாகக் கையாள்வதற்காக நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் பம்ப் ஸ்டோரேஜ் (Pumped Storage) எனப்படும் நீர்மின் திட்டப் பணிகளை உடனடியாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த காலங்களில் சூரியசக்தி மின் திட்டங்களுக்கான அனுமதிகளை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஒவ்வொரு மெகாவாட் அப்ரூவலுக்கும் (மின்திட்ட அனுமதி) தலா 25 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகப் பல நிறுவனங்கள் மற்றும் வெண்டர்கள் நேரடியாகவே பேட்டியளித்துக் குற்றம் சாட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். இத்தகைய முறைகேடுகள் தொடர்பாகப் புகார்கள் பெறப்படும் பட்சத்தில், சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மின்சாரத்துறையில் எங்கு, என்னென்ன பிரச்சினைகள் நிலவுகின்றன என்பது துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அவற்றைச் சீரமைப்பதற்கான பணிகள் தினசரி அடிப்படையில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மின்சாரத்துறையை மீண்டும் மக்களுக்கான ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும், பல லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் உன்னதமான துறையாகவும் மாற்றியமைப்பதே தற்போதைய அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.





