சிஎஸ்கே, சென்னை ரசிகர்கள், ரஜினி டயலாக், நண்பர் பேசில் ஜோசப் குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சனின் அதிரடி பேச்சு வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் உலகில் தனித்துவமான ரசிகர் ஆதரவை பெற்றுள்ள வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் சஞ்சு சாம்சன், தற்போது சென்னை ரசிகர்களிடமும் வேகமாக நெருக்கத்தை உருவாக்கி வருகிறார். சென்னையில் நடைபெற்ற “அதிரடி” திரைப்பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கிரிக்கெட், சினிமா, நண்பர்கள், சென்னை உணவு, CSK ரசிகர்கள் என பல விஷயங்கள் குறித்து மிக இயல்பாக பகிர்ந்துகொண்ட பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக மாறியது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற பஞ்ச் டயலாக்கை சஞ்சு சாம்சன் மேடையில் பேசிய அந்த நொடியே. ரசிகர்கள் கோரிக்கைக்கு இணங்க அவர் “நான் ஒரு வாட்டி சொன்னா, 100 வாட்டி சொன்ன மாதிரி” என பேசியதும் அரங்கமே கைதட்டலால் முழங்கியது. பின்னர் அதனை கலகலப்பாக மாற்றிய அவர் “அது ஒரு தடவை சொன்ன ஒரு தடவை சொன்ன மாதிரிதான்” என சிரித்தபடி கூறியது நிகழ்ச்சியை மேலும் உயிர்ப்பாக்கியது.
பேசில் ஜோசப்புடன் சஞ்சு சாம்சனின் நட்பு எப்படி?
இந்த நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இயக்குநரான Basil Joseph உடனான தனது நட்பு குறித்து சஞ்சு சாம்சன் விரிவாக பேசினார். “அவர் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் என்னை அழைத்து, அந்த ஷாட் சரியா இல்ல, இது பெட்டரா பண்ணிருக்கலாம் என்று சொல்வார். அதே மாதிரி அவர் படங்களை பார்த்து நானும் கருத்து சொல்வேன்” என்று சிரிப்புடன் பகிர்ந்தார்.
பேசில் ஜோசப்பின் படைப்புகளைப் பற்றி பேசும்போது, “கேரளாவில் அவர் ஏற்கனவே பெரிய பேர். ஆனால் ‘மின்னல் முரளி’ படம் வந்த பிறகு நான் பெரிய ரசிகனாக மாறிட்டேன். நேரடியாக கால் பண்ணி Huge fan என்று சொன்னேன்” என்றும் குறிப்பிட்டார்.
அவர்களுக்கிடையிலான உறவை “மொக்க friendship” என நகைச்சுவையாக விவரித்த சஞ்சு, “இது சீரியஸான relationship கிடையாது. ஒருவரை ஒருவர் motivate பண்ணிக்கிட்டே இருப்போம்” என்றார். குறிப்பாக நண்பர் சோர்வாக இருக்கும் நேரங்களில் எப்படி உற்சாகப்படுத்துவீர்கள் என கேட்கப்பட்டபோது, “அந்த சிரிப்பு ரக கக்கன்னு சிரிப்பாலே போதும்” என்ற பதில் ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
“சென்னை ஒரு Second Home” – சஞ்சு சாம்சன் உருக்கம்
சென்னை மற்றும் தமிழ்நாட்டுடன் தனது நெருக்கத்தை சஞ்சு சாம்சன் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துகொண்டார். தனது குழந்தைப் பருவத்தை நினைவுகூர்ந்த அவர், “என் வீடு திருவனந்தபுரம் – தமிழ்நாடு border பகுதியில். அங்க தமிழ் படங்களோட connect ரொம்ப அதிகம். ரஜினி சார், கமல் சார், விஜய் அண்ணா படங்கள் பார்த்து தான் வளர்ந்தோம்” என்றார்.
சென்னை ரசிகர்களின் அன்பு குறித்து அவர் பேசும்போது, “எங்க போனாலும் ‘சேட்டா next match ஜெயிங்க, IPL cup அடிக்கிறோம்’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அந்த love heartல இருந்து வருது. அதனால connect ஆக ரொம்ப easy” என்றார்.
சிஎஸ்கே ரசிகர்களின் உணர்ச்சி பூர்வமான ஆதரவு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், “இது ஒரு journeyயின் ஆரம்பம் மாதிரி feel ஆகுது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“CSKல விளையாடுறது பெரிய பொறுப்பு”
முன்னதாக நடந்த ஒரு விருது விழாவில், “எந்த IPL அணியை support பண்றீங்க?” என்ற கேள்விக்கு, “ராஜஸ்தான் ராயல்ஸ் for my best friend Sanju” என பேசில் ஜோசப் கூறிய சம்பவமும் மேடையில் நினைவுகூரப்பட்டது.
அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டபோது, தற்போது சிஎஸ்கே குறித்து பேசும் போது சஞ்சு சாம்சன் மிகவும் பொறுப்புடன் பதிலளித்தார். “இந்த அளவுக்கு championship வென்ற franchiseல வரும்போது responsible ஆக இருக்கணும். வெளியிலிருந்து பார்க்கும்போது ‘பாசம்’ன்னு சொல்வாங்க. ஆனா அது love-ஐ தாண்டி ஒரு emotion” என்றார்.
சென்னை ரசிகர்களின் ஈடுபாடு குறித்து அவர் ஆச்சரியத்துடன் பேசியது, ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினி மீது இருக்கும் ரசிகத்தனம் வெளிப்பட்ட தருணம்
“உங்களோட favourite hero யார்?” என்ற கேள்விக்கு எந்த தயக்கமும் இல்லாமல் “Always Superstar Rajinikanth” என்று பதிலளித்தார் சஞ்சு சாம்சன்.
அதன்பின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால், மேடையில் நேரடியாக ரஜினி பாணியில் டயலாக் பேசிய அவர், அரங்கையே உற்சாகத்தில் ஆழ்த்தினார். குறிப்பாக அவர் பேசிய பாணி, body language, timing ஆகியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னை உணவும் பிடித்ததே
சென்னை உணவுகள் குறித்தும் சஞ்சு சாம்சன் பேசினார். “Last week நாயர் Mess போயி சாப்பிட்டேன். வேற லெவல் taste” என்று அவர் கூறியதும் ரசிகர்கள் சிரிப்புடன் கைதட்டினர்.
மேலும், பேசில் ஜோசப்புடன் தங்களது favourite hanging spot குறித்து பேசும்போது, “கொச்சியில் ஒரே apartmentல மேலே கீழே தங்கியிருக்கோம். மொட்டைமாடிதான் எங்களோட hanging spot” என சிரிப்புடன் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் “அதிரடி” படக்குழு சார்பில் சிஎஸ்கே T-shirt வழங்கப்பட்டபோது, அதில் சஞ்சு சாம்சனும் பேசில் ஜோசப்பும் autograph போட்டனர். “அதிரடி படம் எப்படி success ஆகுதோ, அதே மாதிரி CSKவும் cup win பண்ணணும்” என்ற வாழ்த்தும் மேடையில் ஒலித்தது.
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பட உலகம் இடையே உருவாகும் இந்த வகை தொடர்புகள், தமிழ்நாட்டில் ரசிகர் கலாச்சாரத்தின் தனித்துவத்தை மீண்டும் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக சஞ்சு சாம்சன் போன்ற கேரள வீரர் ஒருவர், தமிழ் சினிமா, சென்னை ரசிகர்கள், சிஎஸ்கே உணர்வு ஆகியவற்றுடன் இவ்வளவு இயல்பாக இணைந்திருப்பது தென்னிந்திய கலாச்சார இணைப்பின் புதிய வடிவமாக பார்க்கப்படுகிறது. விளையாட்டு மற்றும் சினிமா இரண்டும் தமிழ்நாட்டில் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது உணர்வு, அடையாளம் மற்றும் மக்கள் உறவுகளின் வெளிப்பாடாக மாறியிருக்கிறது என்பதையும் இந்த நிகழ்வு காட்டுகிறது.
சஞ்சு சாம்சன் எந்த ரஜினி டயலாக்கை பேசினார்?
“நான் ஒரு வாட்டி சொன்னா, 100 வாட்டி சொன்ன மாதிரி” என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபல டயலாக்கை அவர் மேடையில் பேசினார்.
சஞ்சு சாம்சன் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்?
“அதிரடி” திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் பேசில் ஜோசப்புடன் கலந்து கொண்டார்.
சென்னை ரசிகர்கள் குறித்து சஞ்சு சாம்சன் என்ன சொன்னார்?
சென்னை ரசிகர்கள் மிகுந்த பாசத்துடன் அணுகுகிறார்கள் என்றும், அந்த அன்புடன் connect ஆக மிகவும் easy என்று கூறினார்.
பேசில் ஜோசப்புடன் சஞ்சு சாம்சனின் நட்பு எப்படி?
இருவரும் ஒருவரின் வேலை குறித்து மற்றொருவர் கருத்து சொல்லும் அளவுக்கு நெருக்கமான நண்பர்கள் என சஞ்சு சாம்சன் கூறினார்.
சஞ்சு சாம்சனுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்?
சூப்பர் ஸ்டார் Rajinikanth தான் தனது எப்போதும் favourite hero என்று அவர் தெரிவித்தார்.








