தருமபுரி, ஜூன் 2: தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காவிரி ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாபாளையம், கேரட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளிலும், கர்நாடக மாநில எல்லைப் பகுதியான கனகபுராவிலும் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்தத் தொடர் மழையின் காரணமாகக் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை குறைவான அளவில் வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவு, நேற்று காலை நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நள்ளிரவிலும் மழை நீடித்ததால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமென ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாகத்தான் காவிரி நீர் தமிழக எல்லைக்குள் நுழைகிறது. இதனால், அங்குள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவை தொடர்ந்து துல்லியமாகக் கணக்கிட்டும், தீவிரமாகக் கண்காணித்தும் வருகின்றனர். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடிக்கும் பட்சத்தில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆற்றோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி ஆகஸ்ட் 25, 2026 ; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில், 41வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தேசிய அளவில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து… Read more: நாம் மறைந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கையில் பார்வையாக வாழலாம் கண் தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி
20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்: 200 பேர் முற்றுகைப் போராட்டம் – ஆகஸ்ட் 28 வேலைநிறுத்தத்தை முடக்க முயற்சி என குற்றச்சாட்டு நெல்லை, ஆக.24:2026ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நெல்லையில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில்,… Read more: 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்..
ஆகஸ்ட் 22; 2026 : திருநெல்வேலி கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் மாநாடு – திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். Also Read : 20 டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட் ; 200 ஊழியர்கள் போராட்டம்.. தமிழ்நாடு கிராம வங்கி இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான முதலாவது மாநாடு திருநெல்வேலியில் நேற்று மிகச்… Read more: கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்: தமிழ்நாடு கிராம வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்!
சென்னை , ஜூலை 9 : தமிழக வெற்றிக் கழக (டிவிகே) சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், 5 பேரைத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தங்களின் காவலில் எடுத்து விடிய விடியத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாள் என்ற நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி சதித்… Read more: டிவிகே MLAக்கு ₹50 கோடி குதிரை பேரம்: பின்னணியில் சர்வதேச கைகள்? சிங்கப்பூர் நபர் யார்? போலீஸ் வலைவீச்சு
நெல்லை , ஜூலை 5 : நெல்லை மாநகரின் முக்கிய விரிவாக்கப் பகுதியான கே.டி.சி நகரை அடுத்த வ.உ.சி நகரில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று பக்திப் பெருக்கோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக வைபவத்தைக் காண்பதற்காக நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டு தரிசனம் செய்தனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கத்தா… Read more: நெல்லை வஉசி நகரில் பிரமாண்ட கும்பாபிஷேகம்! 45 லட்சத்தில் புதுப்பித்த வரசித்தி விநாயகர் கோவில் திறப்பு
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments