முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பு பேட்டி

முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் அதேபோல் ஆட்சியும் இருக்கும் என நம்புகிறேன் என உசிலம்பட்டி அருகே சேயோன் பட துவக்க விழா நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பு பேட்டி

image 397

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் டைரக்டர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். படபூஜைக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் சேயோன் திரைப்படம் எப்படி வரும் என்று கேள்வி எழுப்பியதற்கு ?..

சேயோன் திரைப்படப் பணிகள் இன்று பூஜையுடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. அதற்கான உழைப்பை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

சேயோன் கதைக்களம் மதுரையை மையப்படுத்தி இருக்குமா என்ற கேள்விக்கு ?
மதுரைக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நம்ம ஊர் பக்கம் வந்து நம்ம ஊர் தொடர்பான கதையை தாய் கிழவி டைரக்டரோடு செயல்படுவது இன்னும் சிறப்பு !
மதுரைக்கு என்ற ஒரு பவர் உள்ளது அந்த பவர் குறையாமல் படம் இருக்கும் என்றார்.

இந்தப் படம் விருமாண்டி போல் இருக்குமோ என கேள்வி எழுப்பியதற்கு, விருமாண்டி படம் போல் எடுக்க வேண்டும் என நினைக்கவில்லை அதில் எப்படி எல்லோருக்கும் பிடிக்கும் கதை இருந்ததோ, அதேபோல் இருக்கும்.

தமிழக முதல்வராக விஜய் ஆட்சி செய்வது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு..
எங்களுடைய துறையில் இருந்து ஒரு முதல்வர் அது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. முதல் நாள் அவர் வெற்றி பெற்ற பிறகு போன் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன். அதே அமைதியில் என்னிடம் நல்லா இருக்கீங்களா ?என்று கேட்டு என்னுடைய வாழ்த்தை பெற்றுக் கொண்டார். அவர் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார். இதுவும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

பேட்டி : சிவகார்த்திகேயன் ( நடிகர் )

முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் நடிகர் சிவகார்த்திகேயன் பரபரப்பு பேட்டி

தமிழகத்தின் முக்கிய மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் “அம்மா உணவகங்கள்” மீண்டும் தரமான சேவையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்கவும், தரமான மற்றும் சுவையான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் நேரடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த நடவடிக்கை, சமீப காலமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்த புகார்கள் அதிகரித்த நிலையில் மேற்கொள்ளப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. More

தோனியின் கடைசி IPL போட்டியா? நேரில் பார்க்க CM விஜயும் வருகிறாரா?”

சென்னை சேப்பாக்கம் மைதானம் இன்று முழுவதும் மஞ்சள் கடலாக மாறியுள்ளது. IPL 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் முக்கியமான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆனால், சாதாரண லீக் போட்டியை விட இந்த ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

அதற்கான மிகப்பெரிய காரணம் — இது மகேந்திர சிங் தோனியின் கடைசி IPL போட்டியாக இருக்கக்கூடும் என்ற பரபரப்பு.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த போட்டியை நேரில் பார்க்க வருவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கம் முழுவதும் தற்போது திருவிழா சூழல் நிலவுகிறது. More

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »