சென்னை , ஜூலை 1: முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது அதிகாரப்பூர்வ கூட்டணி கட்சிகளின் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது நூற்றி எட்டு தொகுதிகளில் கிரிப் எடுத்து வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருந்தாலும் கூட வெளியில் இருந்து ஆதரவளிக்கும் மற்றும் கூட்டணியில் நீடிக்கும் கட்சிகளிடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.
சில நேரங்களில் அரசின் திட்டங்களுக்கு ஆதரவாகவும் பல நேரங்களில் பொதுவெளியில் கடுமையான கண்டன அறிக்கைகளை வெளியிடுவதுமாக தோழமை கட்சிகள் செயல்பட்டு வருவதால் நிலவக்கூடிய ஒருவித தெளிவற்ற தன்மையை மாற்றி அரசை முழுமையாக ஸ்ட்ரீம்லைன் செய்யும் நோக்கிலேயே இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை தொடர்ந்து இந்த அரசின் ஸ்திரத்தன்மை குறித்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் தாங்கள் அமைத்துள்ள கூட்டணி மிகவும் பலமானது என்பதையும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆட்சிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பதையும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக வெற்றி கழகம் இருக்கிறது.
Also read : திமுக அதிமுக பொது வேட்பாளர் வியூகம்: தமிழக இடைத்தேர்தல் களத்தில் தவெக போடும் புதிய கணக்கு
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தோழமை கட்சிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் புரோட்டோகால் படி டெலிகேஷன் எனப்படும் பிரதிநிதிகள் குழுக்கள் அழைக்கப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதிதாக தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாக்கூர் தலைமையிலான பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்த குழுவில் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இடம் பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் கடந்த காலங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி அமைவதில் மிக முக்கிய பங்காற்றியவர் ப.சிதம்பரம் என்பதால் அவர் தற்போதைய டிவிகே கூட்டணி கூட்டத்தில் அமர்ந்திருப்பது உற்றுநோக்கப்படுகிறது. அவருடன் அக்கட்சியின் எம்பி ஜோதிமணியும் இந்த பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றுள்ளார். மறுபுறம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் வந்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் அதன் எம்எல்ஏக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காதர் மொய்தீன் வருகை தருவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால் அவரது கட்சி எம்எல்ஏக்கள் காத்திருந்து பின்னர் அவருடன் இணைந்தே கூட்ட அரங்குக்குள் சென்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் முதலமைச்சர் விஜய்யுடன் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே இந்த உயர்மட்ட ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தோழமை கட்சிகளின் சார்பில் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்திருந்த போதிலும் அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டு பெயர்ப் பட்டியலில் உள்ள முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தின் மிக சுவாரசியமான மற்றும் உற்றுநோக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் ஒட்டுமொத்தமாக நடைபெறும் கூட்டத்தை தாண்டி முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவருடனும் தனித்தனியாக ஒன் டு ஒன் முறையில் பேச திட்டமிட்டுள்ளார். கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளின் உண்மையான எதிர்பார்ப்புகள் என்ன அரசிடமிருந்து அவர்கள் என்ன மாதிரியான பங்களிப்பை விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் தொகுதி சார்ந்த அல்லது கொள்கை சார்ந்த விமர்சனங்கள் என்ன என்பதை நேரடியாகக் கேட்டு அறிவதற்காகவே இந்த தனிநபர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில் இந்த கூட்டத்தின் உடனடி அஜெண்டாவாக பார்க்கப்படுவது வரவிருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தல் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஒவ்வொரு தோழமை கட்சியும் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து ஏற்கனவே தங்களுக்குள் ஆலோசித்து விட்டு தங்களின் டிமாண்டுகளை முன்வைக்க தயாராகவே வந்துள்ளன. குறிப்பாக மஜதக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை எதிர்பார்க்கின்றன. ஆனால் தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை இந்த முதலாவது கூட்டத்தை தொகுதி பங்கீட்டுக்கான கூட்டமாக பார்க்காமல் தங்களின் கூட்டணியில் யாரெல்லாம் தற்போதும் உறுதியாகவும் பலமாகவும் நீடிக்கிறார்கள் என்பதை அனலைஸ் செய்வதற்கான ஒரு வாய்ப்பாகவே கருதுகிறது. தோழமை கட்சிகள் வெளியிடும் விமர்சனங்களால் பொதுவெளியில் தமிழக வெற்றி கழக அரசு ஏதோ தனிமைப்படுத்தப்படுவது போன்ற ஒரு பிம்பம் உருவாவதைத் தடுத்து ஒரு வலுவான நீண்ட கால கூட்டணியை நிறுவுவதே முதலமைச்சர் விஜய்யின் லாங் விஷன் திட்டமாக இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலைத் தாண்டி தற்போது காலியாக அறிவிக்கப்பட்டுள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என திருமாவளவன் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தாலும் கூட இடைத்தேர்தலில் தங்களுக்கு தகுந்த இடங்களை ஒதுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளிடம் நிலவுகிறது.
இருப்பினும் இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் தமிழக வெற்றி கழகமே அப்பர் ஹேண்ட் எனப்படும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தன் வசம் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அண்மையில் மதிமுக கூட்டத்தில் பேசிய வைகோ முதலமைச்சர் விஜய் தன்னிடம் தனது கட்சியின் இரண்டு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு அவர்களை மீண்டும் இடைத்தேர்தலில் நிற்க வைத்து தங்களின் பலத்தை நிரூபித்து வெற்றி பெற வைக்கலாம் என்று கூறியதாக ஒரு கருத்தை குறிப்பிட்டிருந்தார். இது முதலமைச்சரின் மனதில் உள்ள எண்ணத்தை பிரதிபலித்தாலும் கூட இதன் பின்னணியில் உள்ள நடைமுறை அரசியல் சிக்கல்கள் சாத்தியக்கூறுகள் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசியல் மூலோபாயவாதிகள் எனப்படும் பொலிட்டிகல் ஸ்ட்ராட்டஜிஸ்டுகள் தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும். இந்த எட்டு தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு முழுமையாக பகிர்ந்தளிப்பதா அல்லது பெரும்பான்மையான தொகுதிகளில் டிவிகே போட்டியிட்டு சில இடங்களை மட்டும் தோழமை கட்சிகளுக்கு வழங்குவதா என்பது இந்த கூட்டத்தின் முடிவிலேயே தெரியவரும். இது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே என்றும் வரும் காலங்களில் இது போன்ற கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டு கூட்டணி மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





