சென்னை , May 16: தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்காணித்து தடுக்கும் பொருட்டு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆணையர் திடீர் சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளார். மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மிக முக்கிய அம்சமாக, அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதன் வளாகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுபானம் மற்றும் இதர போதைப்பொருட்கள் சமூகத்தில் எளிதாகக் கிடைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கள்ளச்சாராயம் தயாரித்தல், போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையர் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள் இணைந்து கூட்டுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் மட்டுமின்றி, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து மையங்களிலும் இந்தத் தொடர் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதிகமாகக் கூடும் இடங்களைக் கண்டறிந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்தின் எதிர்காலத்தையே சீர்குலைக்கும் என்பதால், இந்த நடவடிக்கைகள் தற்போதைய சூழலில் மிக அவசியமான ஒன்றாக அதிகாரிகளால் கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுடன் இணைந்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் புதிய வடிவத்தைப் பெற்றுள்ளன. முன்னதாக, போதைப்பொருள் புழக்கத்தைக் கண்காணிக்கவும், முற்றிலுமாகத் தடுக்கவும் தனிப் பிரிவுகள் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் சிறப்பு காவல் படைகள் ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த திடீர் சோதனை உத்தரவு அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரை போதைப்பொருள் வலையிலிருந்து பாதுகாப்பதில் அரசு உறுதியான மற்றும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
காவல்துறையின் வெறும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், கல்வி நிறுவனங்களில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் இந்த உத்தரவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய முத்தரப்பினரிடமும் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தனிப்பட்ட மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். மேலும், போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில், சுகாதாரத் துறையுடன் இணைந்து போதை மீட்புத் திட்டங்களைச் வலுப்படுத்தவும் இந்த புதிய உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அக்டோபர் 04:2026; திருநெல்வேலியில் உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 5-வது காவேரி மாரத்தான் போட்டியில் 3,900-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஏஞ்சலோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தானில், 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும், அதனைத் தொடர்ந்து 6.15 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் தொடங்கியது. 10 கிலோமீட்டர் போட்டியை நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர்… Read more: ஆரோக்கியமான இதயத்திற்காக ஓட்டம் – 3,900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற காவேரி மாரத்தான்…
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ரேஷன் கடைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்: நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அவற்றை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா… Read more: அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் மூலம் முதல்வர் விஜய் வழங்க எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
திருநெல்வேலி செப்டம்பர் 8, 2026 ; நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 104 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஒருபுறம் கொளுத்தும் வெயில்… மறுபுறம் மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழை… என நெல்லையில் வானிலை தொடர்ந்து முரண்பாடாக காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாகவே இதுபோன்ற வானிலை மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாற்றத்தால், வெளிப்புற தட்பவெப்ப நிலைக்கு… Read more: காலநிலை மாற்றத்தால Zoom ஆன சூரியன் ! கொதிக்கும் வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறது எப்படி ?
41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா நிறைவு விழா திருநெல்வேலி, செப்டம்பர் 05,2026 : திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில் நடைபெற்று வரும் 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும்… Read more: “ஓராண்டுக்குத் தேவை 1.5 லட்சம் கருவிழிகள்” – விழிப்புணர்வு பரப்புரையில் அகர்வால் மருத்துவமனை..
செப்டம்பர் 05, 2026 ; திருநெல்வேலி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் “அரச காவல்” குறும்படம் வெளியீடு… தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ACS நிறுவனம் தயாரித்து இயக்கியுள்ள “அரச காவல்” குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினரின் பணிச்சுமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு காவலரின் அன்றாட வாழ்க்கையை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தை, ரெட்டியார்பட்டி சுபாஷ் சந்திரன் எழுதி… Read more: காவலரின் ஒரு நாள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘அரச காவல்” குறும்படம்..
At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments